(இ
- ள்.) அண்டர் ஏறு அனையவன் - தேவர்களுள் ஆண் சிங்கம்
போன்றவனாகிய இந்திரன், அவசம் மாறி - மூர்ச்சைதெளிந்து, பின்
கண்டகன் கைதவம் நினைந்து - பின்பு அக் கொடியவனது வஞ்சனையை
உணர்ந்து, இக் கள்வன் நேர்மண்டு அமர் ஆற்றுவான் - இந்தக் கள்வனுக்கு
நேர் நின்று மிக்க போரைச் செய்வதற்கு, வலியிலோம் என - வன்மை
யுடைய மல்லோம் என்று கருதி, புண்டரீகத் தவன் உலகில் போயினான் -
தாமரை மலரில் வசிக்கும் பிரம னுலகத்திற் சென்றான் எ - று.
நேர்
நின்று என ஒரு சொல் வருவிக்க. ஆற்றுவான் : வினையெச்சம். (22)
தாழ்ந்துதான்* படுதுயர் விளம்பத் தாமரை
வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள்
வீழ்ந்தமார் பினனடி வீழ்ந்து செப்பமால்
சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான். |
(இ
- ள்.) தாழ்ந்து - வணங்கி, தான் படுதுயர் விளம்ப - தான் விருத்திரனாற்பட்ட
துன்பங்களைக் கூற, தாமரை வாழ்ந்தவன் - தாமரை மலரில் வசிப்பவனாகிய அயன், வலாரியோடு
அணைந்து - இந்திரனோடுஞ் சென்று, மாமகள் வீழ்ந்த மார்பினன் அடி - திருமகள் விரும்பி
வசிக்கும் மார்பையுடைய திருமாலின் அடிகளில், வீழ்ந்து - வீழ்ந்து வணங்கி, செப்ப
- சொல்ல, மால் - திருமால், சூழ்ந்து - ஆலோசித்து, வான் நாடனை நோக்கிச் சொல்லுவான்
- இந்திரனைப் பார்த்துக் கூறுவான் எ - று.
படுகின்ற
துயருமாம். வாழ்ந்தவன் : காலங் கருதிற்றிலது, வலாரி - வலனுக்குப் பகைவன் : நெடிற்
சந்தி. மாவாகிய மகள். வீழ்ந்த - விரும்பிய. (23)
ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம்
மாற்றவ ருயிருண வலின் றாதலால்
வேற்றொரு புதியது+வேண்டு மாலினிச்
சாற்றுது மதுபெறுந் தகைமை கேட்டியால். |
(இ
- ள்.) உன் அங்கை வச்சிரம் ஆற்றவும் பழையது - உனது
கையிலுள்ள வச்சிரப்படையானது மிகவும் பழையது : மாற்றவர் உயிர் உண
வலி இன்று - (அதனால்) பகைவர்களின் உயிரை உண்ணுதற்கு
வலிமையிலதாயிற்று; ஆதலால் வேறு ஒரு புதியது வேண்டும் - ஆகலான்
வேறு ஒரு புதிய படைவேண்டும்; இனி அது பெறும் தகைமை சாற்றுதும்
கேட்டி - இப்பொழுது அதை யடையுந் தன்மையைச் சொல்லுவேம்
கேட்பாயாக எ - று.
இன்று
- உடையதன்று. வேற்றொரு : றகர வொற்று விரித்தல். ஆல்
இரண்டும் அசை. மால் எனப் பிரித்து இந்திரனெனப்பொருள் கொண்டு
விளியாக்குவாருமுளர். கேட்டி : ஏவன் முற்று; கேள் : பகுதி. ட் :
எழுத்துப்பேறு, இல் : விகுதி. (24)
(பா
- ம்.) * தாழ்ந்து தன். +புதியதா.
|