தொடையகன்
மார்பநாந் தூய பாற்கடல்
கடையுநா* ளசுரருஞ் சுரருங் கையில்வெம்
படையொடு மடையன்மின் பழுதென் றப்படை
அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ. |
(இ
- ள்.) தொடை அகல் மார்ப - மாலையை யணிந்த பரந்த
மார்பையுடையவனே, நாம் தூய பால்கடல் கடையும் நாள் - நாம் புனிதமான
பாற்கடலைக் கடையுங்காலத்து, அசுரரும் சுரரும் - அசுரர்களும் தேவர்களும்,
கையில் வெம்படையொடும் அடையன்மின் - கரத்தில்கொடிய
படைக்கலங்களோடு வாராதீர்கள்; பழுது என்று - (அங்ஙனம் வருதல்)
குற்றமாகும் என்று, அப்படை அடையவும் - அப் படைகள் அனைத்தையும்
- ததீசிபால் அடைவித்தாம் - ததீசிமுனி வனிடத்தே சேர்ப்பித்தோம் எ - று.
தொடைய,
கல் எனப் பிரித்து, மாலையைுடைய மலைபோன்ற
என்றுரைத்தலுமாம். சுரரும் அசுரரும் என்னும் படர்க்கைப் பெயர்கள்
அடையன்மின் என முன்னிலை கொண்டன : இடவழு வமைதி. அங்ஙனம்
வருதல் என்பது அவாய் நிலையால் வருவிக்கப்பட்டது. அடையவும் -
முழுதும். அடைவித்தாம் : தனித் தன்மைப் பன்மை; இந்திரனை
உளப்படுத்திற்றுமாம். அரோ : அசை. (25)
சேட்படு நாணனி
செல்லத் தேவரா
வாட்படை யவுணரா வந்து கேட்டிலர்
ஞாட்படை படையெலா ஞான நோக்கினால்
வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ. |
(இ
- ள்.) நனி சேண்படு நாள் செல்ல - மிக நீட்டிப்புடைய நாள்கள்
கழியவும், தேவரா - தேவராதல், வாள் படை அவுணரா -
வாட்படைகளையுடைய அவுணராதல், வந்து கேட்டிலர் - வந்துகேட்க
வில்லை (அதனால்), ஞான நோக்கினால் - ஞானப்பார்வையோடு கூடிய,
வேள்படை வென்றவன் - மன்மதனுடைய அம்புகளை வென்றவனாகிய
ததீசிமுனிவன், ஞாட்பு அடைபடை எலாம் - போருக்குப் பொருந்திய
அப்படைகளை எல்லாம், விழுங்கினான் - விழுங்கினான் எ - று.
ஆதல்
அல்லது ஆவது என விகற்பப் பொருளில் வரும் இடைச்
சொற்கள் ஈறு தொக்கு நின்றன. ஞான நோக்குடன் கூடிய ததீசி யென்க.
நோக்கினால் அறிந்து விழுங்கினான் எனலுமாம். வேள்படை யென்பது
எதுகை நோக்கி வேட்படையென விகாரமாயிற்று. அரோ : அசை. (26)
விழுங்கிய
படையெலாம் வேற றத்திரண்
டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே
எழுங்கதிர்க் குலிசமா மதனை+ யெய்துமுன்
வழங்குவன் கருணையோர் வடிவ மாயினான். |
(பா - ம்.) * கடையுநர். +இதனை.
|