(இ
- ள்.) விழுங்கிய படை எலாம் - (அங்ஙனம்) விழுங்கப்பட்ட
படைகள் அனைத்தும், வேறு அறத் திரண்டு - வேறாக இன்றி ஒன்றாகத்
திரண்டு, முதுகந் தண்டு ஒன்றியே - முதுகெலும்பைப் பொருந்தி, ஒழுங்கியது
- ஒழுங்குபட்டது; எழும் கதிர் குலிசம் ஆம் - (அஃது) எழுகின்ற
ஒளியையுடைய வச்சிரப்படையாகும்; எய்தும் முன் - நீ சென்று கேட்பதற்கு
முன்னே, கருணை ஓர் வடிவம் ஆயினான் - கருணையே ஒரு உருவமாகிய
அம்முனிவன் அதனை வழங்குவன் - அதனைக் கொடுப்பான் எ - று.
[-
வேறு]
|
என்று மாதவ
னியம்ப வும்பர்கோன்
ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச்
சென்று மாயையின் செயலை நோன்பினால்
வென்ற மாதவ னிருக்கை மேவினான். |
விழுங்கிய
: விழுங்கப்பட்ட வெனச் செயப்பாட்டு வினை. வேறு அற
- ஒன்றாக. முதுகந் தண்டு - முதுகின் நடுவிலுள்ள பெரிய என்பு; இது
வீணா தண்டமெனவும் படும். எய்து முன் : உபசாரம். வடிவ மாயினான்
ஆகலின் வழங்குவன் என்ப. ஆலும் ஏயும் அசை. (27)
(இ
- ள்.) என்று மாதவன் இயம்ப - என்று திருமால் கூற, உம்பர்
கோன் - தேவேந்திரன், ஒன்றும் வானவர் தம்மொடு - பொருந்திய
தேவர்களோடும், ஒல்லெனச் சென்று - விரைந்து சென்று, மாயையின்
செயலை மாயையின் செய்கைத் திறங்களை, நொன்பினால் வென்ற மாதவன்
- தவவலியால் வெற்றி கொண்ட பெரிய தவத்தினையுடைய ததீசிமுனிவனது,
இருக்கை மேவினான் - இருப்பிடத்தை அடைந்தான் எ - று.
மாதவன்
இரண்டனுள் முன்னது இலக்குமிக்கு நாயகன் என்னும் பொருளது; பன்னது பெரிய தவத்தினையுடையான்
என்னும் பொருளது. (28)
[- வேறு]
|
அகமலர்ந்
தருந்தவ னமரர்க் கன்புசுர்*
முகமலர்ந்த தின்னுரை முகமன் கூறிநீர்
மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது
தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான். |
(இ
- ள்.) அகம் மலர்ந்து அருந்தவன் - மன மகிழ்ந்து அரிய
தவத்தினையுடைய முனிவன், அமரர்க்கு அன்பு கூர் முகமலர்ந்து -
தேவர்களை நோக்கி அன்பு மிகுந்த இன்முகஞ் செய்து, முகமன் இன் உரை
கூறி - உபசாரமாக இனிய சொற்களைக் கூறி, நீர் மிக மெலிந்து எய்தினீர் -
நீவிர் மிகவும் வருந்தி வந்தீர்கள்; விளைந்தது யாது - நடந்தது என்ன, அது
தகமொழிந்திடல் என - அதைப் பொருந்தச் சொல்லுக என்று கேட்க, வலாரி
சாற்றுவான் - இந்திரன் கூறுவான் எ - று.
(பா
- ம்.) * அன்பினால்.
|