விருந்தோம்புவார்க்கு
அகமகிழ்ச்சி, முகமலர்ச்சி, இன்னுரை யென்னும்
மூன்றும் வேண்டு மென்பதனை,
"முகத்தா னமர்ந்தினிது
நோக்கி யகத்தானாம்
இன்சொ லினதே யறம்" |
என்னும் தமிழ்மறையானறிக.
அன்பினைப் புலப்படுத்தும் முகமலர்ச்சி
யென்க. முகமன் - உபசாரம் : முகமனாக இன்னுரை கூறி : குற்றியலிகரம்.
மொழிந்திடல் என்பது வியங்கோளாகலின் நீர் என்னும் பன்மையோடு
இயைந்தது. (29)
அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம்
முடிகொள்வா னவரொடு முந்தி னே+னது
செடிகொள்கா ரிருளுட லவுணர்த் தேய்த்தெமர்
குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது. |
(இ
- ள்.) அடிகள் - அடிகளே, நீர் மறாாதது ஒன்று - நீர்
மறாதளிப்ப தாகிய ஒரு பொருள் உளது, அதனை வேண்டி - அப்
பொருளைப் பெற விரும்பி, இம்முடிகொள் வானவ ரொடும் முந்தினேன் -
இந்த முடியையுடைய தேவர்களோடும் முந்துற வந்தேன்; அது -
அப்பொருள், செடி கொள் - முடை நாற்றத்தையுடைய, கார்இருள் உடல்
அவுணர் - கரிய இருள்போன்ற உடலினையுடைய அவுணர்களை, தேய்த்து
அழித்து, எமர் - எம்மவர்களின், குடி எலாம் புரப்பது - குடிகளையெல்லாம்
காப்பதாகிய, ஓர் கொள்கைத்து ஆயது - ஒரு கொள்கையினை
உடையதாகியது எ - று.
செடி
- முடை நாற்றம், குற்றம். புரப்பது : தொழிற் பெயர். ஓர் : இசை
நிறைக்க வந்தது. கொள்கை - இயல்பு. (30)
யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென்
றோதலும் யாவையு முணர்ந்த மாதவன்
ஆதவற் கண்டதா மரையி னானனப்
போதலர்ந் தின்னன புதல்வ தாயினான். |
(இ
- ள்.) இனையது யாது எனின் - இத்தன்மையுள்ள பொருள்
யாதென்றால், உன் யாக்கை உள்ளது என்று ஓதலும் - உனது உடலிலுள்ளது
என்று கூறிய வளவில், யாவையும் உணர்ந்த மாதவன் - முக் காலங்களிலும்
நிகழும்எவற்றையும் அறிந்தபெரிாய தவத்தினையுடைய முனிவன், ஆதவன்
கண்ட தாமரையின் - சூரியனைக் கண்ட தாமரையைப் போல, ஆனனப்
போது அலர்ந்து - முகமாகிய மலர் விரிந்து இன்னன புகல்வது ஆயினான்
- இவைகளைக் கூறுவானாயினன் எ - று.
உணர்தற்
குரிமையுடைய என்பதனை உணர்ந்த என்றார்; அறி
வறிந்தமக்கட்பேறு என்புழிப்போல; எல்லாக்கலைகளையும் உணர்ந்த
எனலுமாம். தாமரைப் போதின் ஆனனமலர்ந்து எனப் பிரித்துக் கூட்டலுமாம்.
புகல்வது : தொழிற் பெயர். (31)
(பா
- ம்.) * முன்னினேன்.
|