நடுத்தயா விலார் தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
கொடுத்தயா வறம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பய னிதனின் யாவதே.
|
(இ
- ள்.) ஐயா - இந்திரனே, நடு தயா இலார் - நடுவுநிலைமையும்
கருணையும் இல்லாதவர்கள், தமை நலிய - தங்களை வருத்துதலால், துன்ப
நோய் அடுத்த யாவரும் - துன்பமாகிய பிணியைப் பொருந்திய அனைவரும்,
திரு அடைய - (அத்துன்ப நீங்கி) இன்பத்தைப் பெறுமாறு, யாக்கையைக்
கொடுத்து - என் உடலை அளத்து, அறம் புகழ் கொள்வனே எனின் -
அறத்தையும் புகழையும் பெறுவேனாயின், எடுத்த ஆக்கையின்பயன் -
எடுத்த உடம்பினாலடையும் பயன், இதனின் யாவது - இதனினும் வேறு
யாதுளது எ - று.
தயா
தயையெனத் திரிதற்பாலது திரியாது நின்றது. தயாவிலார்
அவுணரும், துன்பமுற்றவர் அமரரும் ஆம். ஐயா என்பது போலியாயிற்று.
எனின் என்பது அருமை தோன்ற நின்றது;
"நத்தம்போற்
கேடு முளதாகுஞ்
சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது" |
என்னும் திருக்குறள்
இங்கு நோக்கற்பாலது. யாவது : விரித்தல். (34)
[அறுகீரடியாசிரியவிருத்தம்]
|
என்றனன்
கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப
நின்றனன் பிரம நாடி நெறிகொடு* கபாலங் கீண்டு
சென்றனன் விமான மேறிச் சேர்ந்தனனுலகை நோன்பால்
வென்றவன்+றுறக்கம் புக்கு வீற்றினி திருந்தா னம்மா. |
(இ
- ள்.) என்றனன் - என்று கூறி, உலகை நோன்பால் வென்றவன்
- உலக மாயையைத் தவத்தால் வென்ற ததீசிமுனிவன், கரணம் ஒன்றி -
கரணங்கள் ஒன்றுபட்டு, எழு கருத்து - ஒன்றாக யெழுகின்ற
மெய்யுணர்வானது, அறிவை ஈர்ப்ப - விகற்ப அறிவுகளை இழுத்து
அடக்கிக்கொள்ள, நின்றனன் - விசயோக சமாதியில் நின்று, பிரம நாடி
நெறி கொடு - சுழுமுனா நாடியின் வழியால், கபாலம் கீண்டு சென்றனன் -
கபாலத்தைக் கிழித்துச் சென்று, விமானம் ஏறிச்சேர்ந்தனன் - வானவூர்தியில்
ஏறிப்போய், துறக்கம் புக்கு - சிவலோகத்தை யடைந்து, இனிது வீற்றிருந்தான்
- இன்பமுடன் வீற்றிருந்தான் எ - று.
என்றனன்
முதலிய நான்கும் முற்றெச்சங்கள் கரணம் ஒன்றுதலாவது
உடல் பொறி பிராணன் அந்தக்கரணமெல்லாம்பதைப்பின்றி ஒடுங்கி நிற்றல்.
எழு கருத்து அறிவை யீர்ப்ப என்பதற்கு. நான் என்று எழும் போத
விருத்தி மெய்யறிவைப் பற்றிப் பின்செல்ல என்று பிறர் பொருள்
கூறுவாராயினர்; ஈர்ப்ப என்பதற்குப் பின் செல்ல என்பது
(பா
- ம்.) * நெறிக்கொடு. +வென்றனன்.
|