பொருளாகாமையால்
அது பொருந்தா தென்க. பிரம நாடி - சுழுமுனை நாடி;
இதனை, "கொன்படு நலஞ்சேர் சுழிமுனை நாடி கோதறு மந்தநா டியையே
தென்பொலி பிரம நாடியென் றுரைப்பர்" என்று சூதசங்கிதை கூறுதலானறிக.
ஆதார யோகத்தாலேனும், நிராதார யோகத்தாலேனும் மீதானத்தை யெய்த
லுறுவார்க்கு வழியாயிருப்பது இச்சுழமுனை நாடி. மீதானம் - பிரமரந்திரம்.
கபாலம் - தலையின் மேலோடு. விமானம் - வலவன் செலுத்தாத வான வூர்தி. துறக்கம் என்றது
ஈண்டுச் சிவலோகத்தை. இனிது வீற்றிருந்தான் எனப் பிரிக்க. அம்மா : வியப்பின்கண்
வந்த இடைச்சொல். (35)
அம்முனி வற்ற
லீந்த வடுபடை முதுகந் தண்டைத்
தெம்முனை யடுபோர் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து
கம்மியப் புலவ னாக்கங் கரைந்துகைக் கொடுப்ப வாங்கி
மைம்முகி லூர்தி யேந்தி மின்விடு மழைபோ னின்றான். |
(இ
- ள்.) அம்முனிவள்ளல் ஈந்த - அந்த முனியாகிய வள்ளலால்
கொடுக்கப்பட்ட, அடுபடை முதுகந் தண்டை - கொல்லுதற் றொழிலை
யுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, தெவ்முனை - பகைவர்
முனைகின்ற, அடுபோர் சாய்க்கும் - கொல்லுகின்ற போரைப் பின்னிடச்
செய்யும், திறல் கெழு - வலிபொருந்திய, குலிசம் செய்து - வச்சிரப்
படையாகச் செய்து, கம்மியப் புலவன் - தேவதச்சன், ஆக்கம் கரைந்து -
ஆக்கங் கூறி; கைக்கொடுப்ப - கையிற் கொடுக்க, வாங்கி - பெற்று,
மைமுகில் ஊர்தி - கரிய மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் ஏந்தி -
கையிற்றாங்கி, மின்விடு மழைபோல் நின்றான் - மின்னலை வீசும் முகில்
போல் நின்றான் எ - று.
அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு என்னும் முதுமொழிக்கு
எடுத்துக் காட்டாகத் தன் அரிய வுடம்பையும் அன்புடனளித்தானாகலின்
வள்ளல் என்றார். முனை - போர்செய்யிடமுமாம். ஆக்கங் கரைந்து -
ஆக்கமுண்டாாக வாழ்த்துக் கூறி. ஆக்கம் - வெற்றி முதலியன; கரைதல் -
சொல்லுதல். வச்சிரப்படைக்கு மின்னலும், இந்திரனும் மழையும் உவமம். (36)
மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
கறுத்தவா ளவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழல்
வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்
அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான். |
(இ
- ள்.) மறுதவா - குற்றத்தினீங்காத, வஞ்சப் போரால் - மாயப்
போரினால், வஞ்சித்து வன்று போன - வஞ்சனை செய்து வென்றுபோன,
கறுத்தவாள் அவுணன் கொல்வான் - சினத்தினை யுடைய வாளை ஏந்திய
விருத்திரனைக் கொல்லும் பொருட்டு, குன்றம் அறுத்த வானவர்கோன் -
மலையின் சிறகை அரிந்த தேவேந்திரனானவன், கடும்பரி - கடிய
நடையினையுடைய குதிரைகளும், நெடுதேர் - பெரிய தேர்களும், நீழல்
|