வெறுத்த மால்யானை
- நிழலை வெகுளுகின்ற மத மயக்கத்தையுடைய
யானைகளும், மன்னர் - வீரர்களுமாகிய, வேலை புக்கு எழுந்து -
நால்வகைச் சேனைக் கடலின் நடுவிற் றோன்றி, அந்த அவுணர்கோ
மகனைச் சூழ்ந்தான் - அந்த அவுணர் தலைவனை வளைத்தான் எ - று.
தவா
- தாவா என்றதன் குறுக்கம் : ஈறு கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். கறுத்த - வெகுண்ட;
"கறுப்புஞ் சிவப்பும்
வெகுளிப் பொருள" |
என்பது தொல்காப்பியம்.
யானை மதமயக்கத்தால் தன் நிழலைப் பகை
யானை யென்று கருதி வெகுளும். ஆகிய என்னுஞ் சொல் வருவிக்கப்
பட்டது. (37)
வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் செந்தீ
யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தா லென்னத்
தானவர் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச்
சேனையுந் தானு மூண்டு சீறிநின் றடுபோர் செய்வான். |
(இ
- ள்.) வானவர் சேனை மூண்டு வளைத்தலும் - தேவர் படை
கோபங்கொண்டு சூழ்ந்ததும், தானவர் கோனும் - அசுரர் தலைவனாகிய
விருத்திரனும், வடவைச் செந்தீ ஆனது - வடவா முகாக்கினியானது,
வரையின் ஓங்கி - மலைபோல உயர்ந்து, அழன்று உருத்து எழுந்தால் என்ன
- கொதித்துச் சினந்து எழுந்தாற்போல, மானம் தலைக்கொள - மான மீதூர,
எழுந்து பொங்கி - எழுந்து கொதித்து, சேனையும் தானும் மூண்டு -
சேனையுந் தானுமாகச் சினமூண்டு, சீறி நின்று அடு போர் செய்வான் - சீறிக்
கொல்லுதற்குரிய போர் செய்யத் தொடங்கினான் எ - று.
செந்தீ,
செம்மை யென்னும் அடை தன்னோ டியைபின்மை மாத்திரை
நீக்கியது. ஆனது : எழுவாய்ச் சொல். நின்றென்பது இசை நிறைக்க வந்தது.
அடுபோர், ஒரு சொல்லாகக் கொள்ளலுமாம். தானும் சேனையும் எனத்
திணைவிரவிச் செய்வான் என உயர்திணை வினைகொண்டது சிறப்பின் வந்த
திணைவழுவமைதி. (38)
அடுத்தன ரிடியே றென்ன வார்த்தன ராக்கங் கூறி
எடுத்தனர் கையிற் சாப மெறிந்தனர் சிறுநா ணோசை
தொடுத்தனர் மீளி* வாளி தூர்த்தனர் குந்த நேமி
விடுத்தனர் வானோர் சேனை வீரர்மே லவுண வீரர். |
(இ
- ள்.) அவுண வீரர் - அசுர வீரர்கள், வானோர் - தேவர்களின்,
சேனை வீரர் மேல் - படைவிரர்கள் மேல், அடுத்தனர் - நெருங்கி, இடி ஏறு
என்ன ஆர்த்தனர் - இடியேற்றைப்போல ஆரவாரித்து, கையில் சாபம் -
கையில் வில்லை, ஆக்கம் கூறி எடுத்தனர் - வெற்றி கூறி எடுத்து, சிறு நாண்
ஓசை எறிந்தனர் - சிறிய குணத்தொனி யுண்டாமாறு எறிந்து, மீளி
|