I


இந்திரன் பழிதீர்த்த படலம்233



வாளி - வலிமையுடைய அம்புகளை, தொடுத்தனர் தூர்த்தனர் - தொடுத்து
நிறைத்தார்கள்; குந்தம் நேமி விடுத்தனர் - (அவருட் சிலர்) கைவேலையும்
திகிரியையும் எறிந்தார்கள் எ - று.

     எறிதல் - நாணினைத் தெறித்தல். குற்தம் - கைவேல். வானோராகிய
வீரரென்பதே கருத்து. அடுத்தனர் முதலிய ஐந்தும் எச்சமாய் முன்னைய
நான்கும் முறையே ஒன்று ஒன்றனைக்கொண்டு முடிய ஈற்றது தூர்த்தனர்
என்னும் வினைகொண்டு முடிந்தது. (39)

கிட்டினர் கடகக் கையாற் கிளர்வரை யனைய திண்டோள்
கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி
முட்டின ரண்டம் விள்ள முழங்கினர் வடிவா ளோச்சி
வெட்டின ரவுணச் சேனை* வீரரை வான வீரர்.

     (இ - ள்.) வானவீரர் - தேவவீரர்கள், அவுணச் சேனை வீரரை -
அசுரப்படை வீரர்களை, கிட்டினர் - நெருங்கி, கடகக் கையால் -
தொடியணிந்த கைகளால், கிளர்வரை அனைய திண் தோள் கொட்டினர் -
விளங்கா நின்ற மலையை ஒத்த வலிய தோள்களைத் தட்டி, சாரி மாறிக்
குதித்தனர் - இடசாரி வலசாரியாக மாறிக்குதித்து, பலகை நீட்டி முட்டினர் -
கேடகத்தை நீட்டி மோதி, அண்டம் விள்ள முழங்கினர் - அண்டம் பிளக்க
ஆரவாரித்து, வடிவாள் ஓச்சி வெட்டினர் - கூரிய வாளை வீசி
வெட்டினார்கள் எ - று.

     கடகம் - வீரவளை. வடிவாள் - வடித்த வாளுமாம். வானவ வீரர்
என்பது விகாரமாயிற்று. (40)

வீழ்ந்தனர் தோளுந் தாளும் விண்டனர் சோரி வெள்ளத்
தாழ்ந்தனர் போருந் தாரு மகன்றன் ரகன்ற மார்பம்
போழ்ந்தனர் சிரங்க ளெங்கும் புரண்டனர் கூற்றூர் புக்கு
வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளர்.

     (இ - ள்.) வஞ்சகன் சேனை மள்ளர் - வஞ்சகனாகிய விருத்திரன்
படைவீரர்கள், அடுபோர் ஆற்றி - கொல்லுதலையுடைய போரினைச் செய்து,
தோளும் தாளும் வீழ்ந்தனர் - தோள்களும் கால்களும் அறு பட்டவர்களும்,
சோரி விண்டனர் - குருதி சொரிந்தவர்களும், வெள்ளத்து ஆழ்ந்தனர் -
அவ் வெள்ளத்தில் மூழ்கினவர்களும், போரும் தாரும் அகன்றனர் -
போரினையும் தும்பை மாலையினையும் நீங்கினவர்களும், அகன்ற மார்பம்
போழ்ந்தனர் - பரந்த மார்பு பிளக்கப்பட்ட வர்களும், சீரங்கள் எங்கும்
புரண்டனர் - எவ்விடத்தும் தலைவள் புரளப்பட்டவர்களும், கூற்று ஊர்
புக்கு வாழ்ந்தனர் - கூற்றுவனுலகு சென்று வாழ்ந்தவர்களும் (ஆயினார்)
எ - று.

     கீழே விழுந்தனர் தோளும் தாளும் விண்டனர் என்றும், விண்டனர்
வீழ்ந்தனரெனக் கூட்டித் தோளும் தாளும் அற்று வீழ்ந்தனர் என்றும்
உரைத்தலுமாம். ஆயினார் என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது.
மள்ளருட் சிலர் வீழ்ந்தனர், சிலர் விண்டனர் என இங்ஙனம் முற்றாகவே


     (பா - ம்.) * அவுணர் சேனை.