I


234திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



யுரைத்தலுமாம். அஃறிணைச் சினைப் பெயர்கள் ஒணர்திணையோடு
சார்த்தப்பட்டு உயர்திணை முடிபு பெற்றன; திணை வழுவமைதி; இதனை,

"உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்தணை முடிபின"

என்னும் நன்னூற சூத்திரத்தா னறிக. (41)

தாளொடு கழலு மற்றார் தலையொடு முடியு மற்றார்
தோளொடு வீர மற்றார் தும்பையோ டமரு மற்றார்
வாளொடு கரமு மற்றார் மார்பொடு கவச மற்றார்
கோளொடு மாண்மை யற்றார் குறைபடக் குறையா மெய்யர்.

     (இ - ள்.) குறைபட குறையா மெய்யர் - (படைகளால்) குறைக்
கப்படினும் குறையாத உடலையுடைய தேவவீரர்களுட் சிலர், தாளொடு
கழலும் அற்றார் - கால்களோடு வீரகண்டையும் அறுபட்டார்கள்; தோளொடு
வீரம் அற்றார் - சிலர் தோளோடு வீரமும் அறு பட்டார்கள்; தும்பையோடு
அமரும் அற்றார் - சிலர் தும்பை மாலையோடு போரும் நீங்கினார்கள்;
வாளொடு கரமும் அற்றார் - சிலர் வாட் படையோடு கையும் அறுபட்டார்கள்; மார்பொடு கவசம் அற்றார் - சிலர் மார்போடு கவசமும் பிளக்கப்பட்டார்கள்;
கோளொடும் ஆண்மை அற்றார் - சிலர் வலிமையோடு ஆண் தன்மையும்
நீங்கினார்கள் எ - று.

     அமரராகலின் குறையா மெய்யர் என்றார் தாள் முதலியவற்றுக்கு ஏற்ப
அற்றார் என்பதற்கு அறுபட்டார் எனவும் நீங்கினார் எனவும் இங்ஙனம்
உரைத்துக் கொள்க. கோள் - வலிமை. ஒடு : எண்ணிடைச்சொல். இதுவும்
மேலதுபோல் திணை வழுவமைதி. (42)

தொக்கன கழுகு சேனஞ் சொரிகுடர் பிடுங்கி யீர்ப்ப
உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்த மாடப்
புக்கன பிணத்தின் குன்றம் புதைத்தபார் சிதைத்த தண்டம்.

     (இ - ள்.) ஞாட்பினுள் - போர்களத்தில், கழுகு சேனம் தொக்கன
- கழுகுகளும் பருந்துகளும் நிறைந்து, சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப -
சொரிகின்ற குடலை இழுத்துப் பிடுங்கா நிற்பவும், ஒடடல் வாய் நெட்டைப்
பேய்கள் - ஒட்டிய வாயையுடைய நீண்ட பேய்கள், உக்கன குருதி மாந்தி -
சொரிவனவாகிய குருதிகளைக்குடித்து, நக்கன பாடல் செய்ய - சிரித்துப்
பாடவும், கவந்தம் ஆடப் புக்கன - தலை யிழந்த உடல்கள் ஆடத்
தொடங்கின; பார் புதைத்த பிணத்தின் குன்றம் - பூமியை மூடிய
பிணமலையானது, அண்டம் சிதைத்தது - அண்டத்தைச் சிதைவு படுத்தியது
எ - று.

     தொக்கன, நக்கன என்பன வினையெச்ங்களும், உக்கன என்பது
பெயரெச்சமும் ஆயின. ஒட்டல் : தொழிற் பெயர். நெட்டை -
நெடுமையுடைய. ஒட்டலாகியவாய் எனவும், நெட்டையாகிய பேய்கள் எனவும்
உரைத்தலுமாம். புதைத்தது என்பது விகாரமாயிற்றுமாம்.