I


இந்திரன் பழிதீர்த்த படலம்237



     (இ - ள்.) வீங்கு இருள் ஒதுங்க - மிகுந்த இருள் ஓடுமாறு, மேகம்
மின் விதிர்த்து என்ன - முகிலானது மின்னலை வீசினாற்போல, கையில்
ஓங்கு இருங் குலிச வேலை - கையிற் றாங்கிய மிகப் பெரிதாகிய வச்சிரப்
படையை, ஒல்லென விதிர்த்தலோடும் - விரைவாக அசைத்தவுடனே, தீங்கு
உடல் கள்வன் - கருமையுற்ற வலிய உடலையுடைய திருடனாகிய
விருத்திரன், அஞ்சி - பயந்து, வாங்கு இருங்கடலில் வீழ்ந்தான் - வளைந்த
பெரிய கடலினுள் வீழ்ந்து மறைந்து, மறைந்த மை நாகம் ஒத்தான் -
முன்கடல் மறைந்த மைநாகமலையை ஒத்தான் எ - று.

     விதிர்த்தென்ன : விகாரம். ஓங்கிரு : ஒருபொரு ளிருசொல். குலிச
வேல் : பண்பொட்டு. உளமும் உடலும் இருண்ட; உளம் கரிதாதலை ‘அகம்
குன்றி மூக்கிற் கரியார்’ என்னும் குறளானும், ‘கூழின் மலி மனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே’ என்னும் திருக்கோவையானும் அறிக. போன்று -
போல; எச்சத்திரிவு. வீழ்ந்தான் ; எச்சம்; வீழ் மறைந்து என்க. கரிய
வுருவானும் பெரிய வடிவானும் வச்சிரத்திற் கஞ்சிக் கடலுள் ஒளித்தலானும்
மைநாகம் உவமையாயிற்று. மைநாகம் - இந்திரன் வச்சிரத்தால் மலைகளின்
சிறகுகளை யறுத்த ஞான்று வாயுவின் உதவியாற் கடலுளொளித்த ஓர் மலை. (48)

ஒக்கவிந் திரனும் வீழந்தா னுடல்சின வுருமே றன்னான்
புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளரி யண்ணல்
பக்கம்வந் தனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத்
தக்கதோர் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை.

     (இ - ள்.) ஒக்க - அவனோடு கூட. இந்திரனும் வீழ்ந்தான் - இந்திரனும் விழுந்து, உடல் சினம் - மாறுபடும் சினத்தையுடைய, உரும் ஏறு அன்னான் புக்க இடம் தேடிக் காணான் - இடியேறறை ஒத்த விருத்திரன் புகுந்து ஒளித்த இடத்தைத் தேடிக் காணாமல், புண்ணியம் முளரி அண்ணல் பக்கம் வந்து - தூய்மையாகிய தாமரை மலரில் வசிக்கும் பிரமனிடம் வந்து, அனைய செய்தி பகர்ந்தனன் - அந்தச் செய்தியைக் கூறினன்; சராசரம் ஈன்ற தாதை - இயங்குவனவும் நிற்பனவுமாகிய எல்லாவற்றையும் தந்தருளிய தந்தையாகிய பிரமனானவன், பதகன் மாளத்தக்கது ஓர் சூழ்ச்சி முன்னி - பாதகனாகிய அசுரன் மாளத் தகுந்ததாகிய ஒருபாயத்தை எண்ணி எ - று.

     ஒப்ப - உடனாக. உடல் சினம் : பொருபோர் என்பதுபோல நின்றது; உடலுதல் - சினத்தல். புக்கவிடம் புக்கிடமென விகாரமாயிற்று. புண்ணியம் - தூய்மை. அனைய : சுட்டு. தாதை - பிரமன்; பெயர். (49)

விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு
சந்தவெற் படைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப்
பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைக ளெல்லாஞ்*
சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி.+

     (பா - ம்.) * பகைகளெல்லாம். +செப்ப; சொல்வான்.