(இ
- ள்.) விந்த வெற்பு அடக்கினாற்கு - விந்தலையை அடக்கிய
அகத்திய முனிவனுக்கு, ஈது உரை என விடுப்ப - இச்செய்தியைக்
கூறுவாயென அனுப்ப, மீண்டு - திரும்பி, சந்தவெற்பு அடைந்தான் - சந்தன
மரங்களையுடைய பொதியின் மலையை யெய்தினான; பந்த வெற்பு
அறுத்தான் - பாச பந்தமாகிய மலையைத் தொலைத்த அம்முனிவன்,
வானோர் தலைவனை முகமன் கூறி வந்தது எவன் என - தேவேந்திரனை
நோக்கி உபசார வார்த்தைகள் கூறி வந்த காரணம் யாதென்று வினவ, வெற்பு
பறைகள் எல்லாம் சிந்த அறுத்தான் - மலைகளின்சிறகு களெல்லாம் சிதற
அறுத்த இந்திரன், வந்த செயல் எல்லாம் முறையால் செப்பி - வந்த
செய்திகளனைத்தும் வரிசையாகக் கூறி எ - று.
பொதியிலிற்
சந்தனமர மிக்கிருத்தலின் அது சந்த வெற்பு
எனப்பட்டது; பொதியிலே விளைகின்ற சந்தனம் என்றார்
நாட்டுச்
சிறப்பிலும். வந்தது - வந்த காரணம். எவன் - யாது. பறை சிறகு. (50)
யாவையு முணர்ாந்த வெந்தைக் கியானெடுத் துணர்த்து கின்ற
தாவதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்தா னாவி
வீவது மவனால் வநத விழுமநோ யெல்லா மின்று
போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிக ளென்றான். |
(இ
- ள்.) யாவையும் உணர்ந்த எந்தைக்கு - அனைத்தையுமறிந்த
எம் தந்தையாகிய நுமக்கு, யான் எடுத்து உணர்த்துகின்றதாவது என் - யான்
எடுத்துத் தெரிவிப்பது யாது, அமருக்கு ஆற்றாது - போருக்கு ஆற்றாமல்,
ஆழி புக்கு ஒளித்தான் ஆவி வீவதும் - கடலிற் புகுந்து மறைந்த
விருத்திரனுடைய உயிர் நீங்குவதும், அவனால் வந்த விழுமநோய் எல்லாம்
- அவனால் நேர்ந்த துன்ப நோயனைத்தும், இன்று போவதும் கருதி -
இன்றே நீங்குவதும் குறித்து, அடிகள் நும் பால் புகுந்தனம் என்றான் -
அடிகளே நும்மிடத்து வந்தோம் என்றான் எ - று.
ஆவது
: இடைச்சொல். வீவது, போவது என்பன தொழிற் பெயர்கள்.
இன்ற புகுந்தனம் எனினுமாம். ஏனைத் தேவரையும் உளப்படுத்திப்
புகுந்தனம் எனப் பன்மையாற் கூறினான். (51)
என்றவ னிடுக்கண் டீர்ப்பா னிகல்புரி புலனக ளைந்தும்
வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவமாக்கி
நின்றவ னறிவா னந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி
மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான். |
(இ
- ள்.) என்றவன் - என்று கூறின இந்திரனுடைய, இடுக்கண்
தீர்ப்பான் - துன்பத்தை நீக்கும் பொருட்டு, இகல் புரி புலன்கள் ஐந்தும்
வென்றவன் - பகை செய்கின்ற ஐம்புலன்களையும் வெனறவனும், நெடியோன்
தன்னை - திருமாலின் வடிவத்தை, விடையவன் வடிவம் ஆக்கி நின்றவன் -
சிவபிரான் திருவுருவமாகச் செய்து நின்ற உண்மை அறிவு ஆனந்த வடிவாய்,
நிறைந்த - வியாபித்த, வெள்ளி மன்றவன் -
|