வெள்ளியம்பல வாணனின்,
ஊழிச் செந்தீ வடிவினை - சிவந்த ஊழித்யை
யாத்த திருவுருவை, மனத்துள் கொண்டான் - உள்ளத்திற் சிந்தித்தான்
எ - று.
புலன்கள்
இகல் புரிதலை,
"கூட்டமா யைவர்
வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே" |
என்னும் திருநேரிசையிற்
காண்க. கடல் நீர் சுவறக் கருதினமையின் ஊழிச்
செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான் என்றார்.
திருமாலைச்
சிவனுருவாக்கிய வரலாறு : அகத்தியர் வடக்கினின்றும்
புறப்பட்டுப் பொதியிலுக்குச் செல்லுங்கால் திருககுற்றாலத்தை யுடைய
அங்குள்ள வேதியர்கள் அவரது சைவ தவவேடப் பொலிவை நோக்கி
உள்ளம் பொறாதவர்களாய் இகழ்ந்து அவ்விடத்தை விட்டுப் போகுமாறு கூற,
அவர் அங்ஙனமே திரும்பிச் சென்று அம் மறையோரின் அகந்தையைப்
போக்கக் கருதித் திருமாலடியார் கோலங்கொண்டு மீண்டு வந்து அவர்களால்
உபசரிக்கப் பெற்றுத் திருமால் கோயிலை யடைந்து மாயோனது திருமுடிமேல்
தமது திருக்கையை வைத்துச் சிவலிங்கப் பெருமான் வடிவமாக்கினர் என்பது;
இதனை,
"அறுகுமதி
நதிபுனையுஞ் செஞ்சடையம்
பெருமானை யகத்துட் கொண்டு
சிறுகுமுரு வுடையமுனி நாரணனார்
திருமுடிமேற் செங்கை யோச்சிக்
குறுகுகுறு கெனவிருத்தி யொள்ளரக்கிற்
புனைபாவைக் கோலமீது
மறுகுதழ லுற்றென்னக் குழைவித்தோர்
சிவலிங்க வடிவஞ் செய்தான்" |
என்னும் கந்தபுராணச்
செய்யுளா னறிக. (52)
கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற்
பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி
ஐயன தருளைப் பெற்றார்க் கதிசய மிதென்கொன் மூன்று
வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவ ரவரே யன்றோ. |
(இ
- ள்.) கைதவன் - வஞ்சகனாகிய விருத்திரன், கரந்துவைகம்
கடலை - மறைந்துறையும் கடலை, வெற்பு அடக்கும் கையில் பெய்து -
விந்தலையை அடக்கிய கையிற் கொண்டு, உழுந்து எல்லைத்து ஆக்கி -
உழுந்தினளவினதாகச் செய்து, பருகினான் - குடித்தான்; பிறைசேர் சென்னி
யைனது அருளைப் பெற்றார்க்கு - பிறைமதி பொருந்திய திரு முடியையுடைய
சிவபெருமானது திருவருளைப் பெற்ற அடியார் கட்கு, இது அதிசயம் என் -
இது அதிசய மென்பதென்னை, மூன்று வையம் - மூன்றுலகத்தும்,
முத்தொழிலும் செய்ய வல்லவர் - படைத்தல் காததல் அழித்தலாகிய மூன்று
தொழில்களையும் செய்ய வல்லவர்கள், அவரே அன்றோ - அவ்வடியார்களே
அல்லவா எ - று.
|