அரசராகிய நரசிங்கமுனையரையரால்
வளர்க்கப் பெற்று, புத்தூர்ச் சடங்கவி
சிவாசாரியின் மகளைத் திருமணஞ்செய்து கொள்ள மாப்பிள்ளைக்
கோலத்துடன் வந்திருந்தபொழுது பரமசிவனால் ஆவணங் காட்டித்
தடுத்தாட்கொள்ளப்பெற்று, இறைவன் கட்டளை யிட்டபடியே பல
திருப்பதிகட்குஞ் சென்று திருப்பதிகம் பாடித் திருவாரூரையடைந்து
சிவபெருமான் திருவருளால் அங்கே உருத்திர கணிகையர் குலத்தில்
திருவவதாரஞ் செய்திருந்த பரவைநாச்சியாரை மணந்து இன்பந்துய்த்து
வருகின்றவர், திருவொற்றியூரை யடைந்து சங்கிலிநாச்சியாரை மணந்து
மீண்டு திருவாரூரையெய்திப், பரவையார் மிக்க சினத்துடனிருப்பதைப்
பரிசனங்களால் அறிந்து, பரவையின் ஊடலைத் தணித்துத் தம்மை
அவருடன் சேர்ப்பிக்கவேண்டு மெனச் சிவபெருமானைப் பிரார்த்தித்தனர்.
ஈரூராளும் அடிகளாகிய இறைவனும் நள்ளிரவில் பரவையார் வீட்டுக்கு
அருச்சகர் வடிவிற் சென்று, அவரால் மறுக்கப்பட்டு, மீட்டும் தேவர்களும்,
முனிர்களும், சிவகணங்களும் புடைசூழச் சென்று பரவையாரின் ஊடலைத்
தீர்த்துத் தன் தோழநம்பியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனன் என்பது.
இதனைத் திருத்தொண்டர் புராணத்தாலறிக. (20)
ஆளுடைய
அடிகள் |
எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி
அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம். |
(இ
- ள்.) எழுதரும் - எழுதப்படாத, மறைகள் தேறா -
மறைகளாலும் தெளியப் பெறாத, இறைவனை - முதல்வனாகிய சிவபிரானை,
எல்லில் கங்குல்பொழுது - பகற்பொழுதிலும் இராப்பொழுதிலும் உள்ள,
அறுகாலத்து - ஆறுவகையாகிய காலங்களினும், என்றும் - எந்நாளும்,
பூசனை விடாதுசெய்து - இடையறாது பூசனைபுரிந்து, தொழுதகை - கூப்பிய
கைகள், தலைமீது ஏற - தலையின்மீதேற, அழுது - நெக்கு நெக்குருகி
அழுது, துளும்பி - ததும்பி வழிகின்ற, கண்நீருள் மூழ்கி - கண்ணீருட்
படிந்து, அடி அடைந்த - திருவடி நீழலை யடைந்த, அன்பன் -
அன்பராகிய மணிவாசகப் பெருமானின், அடியவர்க்கு - அடியார்களுக்கு,
அடிமை செய்வாம் - தொண்டு செய்வாம் எ - று.
மறைகள்
எழுதப்படாது கேட்கப்பெற்று வந்து எழுதாக்கிளவி
யெனவும் சுருதியெனவும் பெயர் கூறப்படுதலின் எமுதருமறைகள் என்றார்.
கங்குற் பொழுதில் என உருபு விரிக்க. அறுகாலம் : விடியல், நண்பகல்,
எற்பாடு, மாலை யாமம், வைகறை என்பன. எல்லிற் கங்குற் பொழுதறு
காலத்து என்பதற்கு இராப்பகலற்ற விடத்தில் என்றும் பொருள் கூறுப;
இதற்கு எல்லில் என்பதன் இல் சாரியையாகும். மாணிக்கவாசகர் பூசனை
புரிந்து அடியடைந்ததனை,
"பாசவே ரறுக்கும்
பழம்பொரு டன்னைப் பற்றுமா றடியனேற்கருளிப்
பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டியபொருளே" |
எனவும், அவர் அன்பினால்
உருகி அழுததனை,
|