என்றுமாம். திறந்தனைத்து
: தொகுத்தல் விகாரம். ஓன்பான் - ஒன்பது.
மகககபதி - வேள்விக்குத் தலைவன் : நூறுவேள்விகள் இயற்றியவன்.
வலனுடைய உடம்பின் குருதி முதலியவெல்லாம் நவமணிகளாயின்மையின்
செங்கள மனையது என்றார்; இதனை மாணிக்கம் விற்ற
படலத்திற் காண்க.
செங்களம் - போர்க்களம்; செங்களந் துழவுவோள் என்பது புறப்பாடு.
அன்று, ஏ : அசை. (55)
வறந்தநீர்
தன்னின் மின்னு வாள்விதிர்த் தென்னப் பன்மீன்
எறிந்தன நெளிந்த நாக மிமைத்தன வளையு முத்துஞ்
செறிந்தன கரந்த யாமை சேர்ந்தபல் பண்டஞ் சிந்தி
முறிந்தன வங்கங் கங்க முக்கின* சிறுமீ னெல்லாம். |
(இ
- ள்.) வறந்த நீர் தன்னில் - நீர் வற்றிய இடத்தில், மின்னு வாள்
விரித்து என்ன - ஒளியினையுடைய வாட்படையை அசைத்தாற் போல,
பல்மீன் எறிந்தன - பலமீன்கள் துள்ளின; நாகம் நெளிந்த - போம்புகள்
நெளிந்தன; வளையும் முத்தும் இமைத்தன - சங்குகளும் முத்துக்களும் ஒளி
வீசின; யாமை செறிந்தன கரந்த - யாமைகள் நெருங்கி ஒளித்தன; சேர்ந்த
பல் பண்டம் சிந்தி வங்கம் முறிந்தன - பொருந்திய பல பொருள்களையும்
சிதறிக் கப்பல்கள் உடைந்தன; கங்கம் சிறுமீன் எல்லாம் முக்கின -
பருந்துகள் சிறிய மீன்களையெல்லாம் விழுங்கின எ - று.
விதிர்த்தென்ன
: விகாரம். நெளிந்த, கரந்த என்பன அன்பெறாத
பலவின்பால் முற்றுக்கள். செறிந்தன : முற்றெச்சம். முக்குதல் - வாய்
நிறையக் கொண்டுண்ணுதல். (56)
செருவினி லுடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோர்
அருவரை முதுகிற் கார்போ லடைந்துவா னாடர் செய்த
உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும்
பரிசென நோற்றா னின்னும்+பரிபவ விளைவு பாரான். |
(இ
- ள்.) செருவினில் உடைந்துபோன - போரில் தோல்வி
யடைந்துபோன, செங்கண் - சிவந்த கண்களையுடைய, வாள் அவுணன் -
வாட் படையையுடைய அசுரன், அங்கு ஓர் அருவரை முதுகில் - அவ்விடத்து
ஓர் அரிய மலையின் உச்சியில், கார்போல் அடைந்து - முகிலைப்போலச்
சென்று தங்கி, வானாடர் செய்த - தேவர்களாற் செய்யப்பட்ட, உருகெழு
பாவம்தான் - அஞ்சத்தக்க பாவமானது, ஓர் உருவு எடுத்து இருந்து
நோற்கும் பரிசு என - ஒரு வடிவெடுத்து இருந்து தவஞ் செய்யுந்
தன்மைபோல, இன்னும் பரிபவ விளைவு பாரான் நோற்றான் - இன்னமும்
மேலே வருகின்ற துன்பத்தைப் பாராதவனாகித் தவஞ் செய்தான் எ - று.
இன்
: சாரியை. வாள் - கொடுமையுமாம். முதுகு - மலையின்
நடுவுமாம். நிறத்தானும் மலையைச் சார்தலானும் கார் உவமம். தேவர்க்குத்
துன்பம் விளைதலின் வானாடர் செய்த பாவம் என்றார். உரு - அச்சம்;
உருவுட் காகும் என்பது தொல்காப்பியம்.
தான் : அசை. (57)
(பா
- ம்.) * கங்க மூக்கின. +இன்னம்.
|