I


244திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்னுயர்த் துணைவ னாங்கே
     யிருக்கமற் றொருவ னென்னைத்
தன்னுயிர்த் துணையாக் கொள்கை
     தருமமோ வடிக ளென்றாள்.

     (இ - ள்.) மின் உயிர்த்து அனையாள் - மின்னல் ஒரு வடிவு
கொண்டதை ஒத்த அவள், பொன் உயிர்த்து அனைய காட்சி - பொன் ஓர்
உருப்பெற்றதை ஒத்த தோற்றத்தையுடைய, புண்ணிய குரவன் முன்னர்ச்
சென்று நின்று கூறுவாள், அடிகள் - அடிகளே, இது என் கொல் கெட்டேன்
- இஃது என்ன வியப்பு, என் உயிர்த்துணைவன் ஆங்கே இருக்க - என்
உயிர்த்துணைவன் அவ்விடத்து உயிரோடிருக்கவும், மற்றொருவன் -
வேறொருவன், என்னைத் தன் உயிர்த்துணையாக் கொள்கை - என்னைத்
தன் உயித்துணைவியாகக் கொள்ளுதல், தருமமோ என்றாள் - அறமோ
என்று கூறினாள் எ - று.

     உயிர்த்தல் - உருவுகொள்ளுதல். உயிர்த்தது இரண்டும் விகாரமாயின.
இதென் : விகாரம். கொல் : அசை நிலை. கெட்டேன் : வியப்பிடைச் சொல்;
அவலமுமாம். என்னுயிர், தன்னுயிர் என்பன உடையதும் உடைமையும்
வேறாகாத ஒற்றுமைக் கிழமைப் பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத்
தொகைநிலைத் தொடர்கள். (62)

மாதவ ரெழுவர் தாங்க மாமணிச் சிவிகை மீது
போதரி னவனே வானோர் புரந்தர னவனே யுன்றன்
காதல னாகு மென்றான் கைதொழு ததற்கு நேர்ந்தம்
மேதகு சிறப்பா லிங்கு வருகென விடுத்தா டூது.

     (இ - ள்.) மாதவர் எழுவர் தாங்க - முனிவர் எழுவரும் தாங்க,
மாமணிச் சிவிகைமீது போதரின் - பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய
சிவிகையின்மேல் வந்தால், அவனே வானோர் புரந்தரன் - அவனே
தேவர்களைப் புரக்கின்ற வேந்தனாவான்; அவனே உன்றன் காதலன் ஆகும்
என்றான் - அவனே நின் நாயகனுமாவான் என்றான்; கைதொழுது - வணங்கி,
அதற்கு நேர்ந்து - அதற்குடன்பட்டு, அம் மேதகு சிறப்பால் இங்கு வருகென
- அந்தமேன்மையான சிறப்போடு நகுடன் இங்கே வருகென - அந்த
மேன்மையான சிறப்போடு நகுடன் இங்கே வருகவென்று, தூது விடுத்தாள் -
தூதினைப் போக்கினாள் எ - று.

     மாதவர் எழுவர் - சத்தமுனிகள் : அகத்தியன், ஆங்கிரசன், கோதமன்,
காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் என்போர். தன் : சாரியை.
வருகென : தொகுத்தல். (63)

மனிதரின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும்
புனிதிமா தவரை யெண்ணான் புன்கணோய் விளைவும் பாரான்
கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான்
இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சர்ப்ப வென்றான்.