I


246திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) வானோர் - தேவர்கள், பின்னர் தம் குரவனான பிரான்
அடிபணிந்து - பின்பு தம் குரவனாகிய வியாழபகவான் திருவடியைப் பணிந்து, ஐய - ஐயனே, பொன் நகர் - பொன்னுலகமானது, வேந்தன் இன்னி -
மன்னில்லாமல், புலம்பு அடைகின்றது - வருந்துகின்றது, என்னலும் - என்று
வேண்டிக் கோடலும், குரவன் போய் ஆசிரியன் சென்று, இலஞ்சியுள்
ஒளித்தான் கூவி - அந்தக் குளத்தில் மறைந்த இந்திரனை அழைத்து, தன்
உரை அறிந்து போந்த - தன் சொல்லை அறிந்து வெளிவந்த, சதமகன்
கொண்டு மீண்டான் - இந்திரனைஉடன் கொண்டு திரும்பினான் எ - று.

     தன் உரை அறிதல் - ஒலி யியற்கையால் தனது மொழியென அறிதல்.
ஒளித்தான், சதமகன் என்னும் உயர்திணைப் பெயர்கள் இரண்டாம்
வேற்றுமை யாகலின் ஈறு திரிந்தன. (66)

கொடும்பழி கோட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச்
சுடும்பழி கழவ தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோர்ந்தான்
அடும்பழி மண்மே லன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப்
படும்பழி யிதனைத் தீர்ப்பான் பார்மிசை வருதி யென்றான்.

     (இ - ள்.) கொடும்பழி கோட்படடான் - கொடிய பாவத்தால்
பீடிக்கப்பட்டவனாகிய இந்திரன், தன் குரவனை வணங்கி - தன் குருவைத்
தொழுது, என்னைச் சுடும்பழி கழிவது எங்ஙன் சொல் என - என்னை
வருத்துகின்ற இப்பாவமானது நீங்குவது எவ்வாறு சொல்லுக என்று கேட்க,
தொலைவது ஓர்ந்தான் - தீரும் வழியை அறிந்தவனாகிய அக் குரவன்,
அடும்பழி மண்மேல் அனிற் அறாது - வருத்தும் பாவமானது
நிலவுலகத்தல்லாமல் (வேறு இடத்தில்) நீங்காது, நீ வேட்டைக்கு என்ன - நீ
வேம்டையைக் காரணமாகக் கொண்டு, படும்பழி இதனைத் தீர்ப்பான் -
உண்டாகிய இப்பாவத்தைத் தீர்க்கும் பொருட்டு. பார்மிசை வருதி என்றான் -
பூவுலகின்கண் வருவாய் என்று கூறினான் எ - று.

     கோட்பட்டான் - கொள்ளப்பட்டான். பழி கோட்பட்டான் என்பது
தம்மினாகிய தொழிற்சொல் வந்தமையின் இயல்பாயிற்று. சுடும் பழி, அடும்பழி
ஒரு பொருளன. சுடும்பழி முதலியவற்றைச் சுட்டாகக் கொள்க. எங்ஙனம்
என்பது குறைந்து நின்றது. அடும்பழி - கொலைப் பாவம் என்பாருமுளர்.
வேட்டையை வியாசமாகக் கொண்டு என்க. படும் : இறந்தகாலத்தில் வந்தது.
(67)

ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிக னெண்ணித் தீர்க்குந்
தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்ப தன்றிப்
பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த
வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற.

     (இ - ள்.) ஈசனுக்கு இழைத்த குற்றம் - கடவுளுக்குச் செய்த குற்றத்தை, தேசிகன் எண்ணித் தீர்க்கும் - குரவன் தீரும் வழியை ஆராய்ந்து தீர்ப்பான்;
தேசிகற்கு இழைத்த குற்றம் - குரவனுக்குச் செய்த குற்றத்தை, குரவனே
தீர்ப்பது அன்றி - அத்தேசிகனே நீக்குவ தல்லாமல், பேசுவது எவன் - வேறு
கூறுவது யாது; தன்பால் பிழைத்த காரணத்தால் வந்த -