தன்னிடம் தவறு செய்தமையால்
வந்த, வாசவன் பழியைத் தீர்ப்பான் -
இந்திரன் பழியைத் தீர்ப்பதற்கு, குரவனே வழியும் கூற - அவ்வியாழ
பகவானாகிய தேசிகனே வழியையும் சொல்ல எ - று.
பேசுவது
- வேறொருவர் தீர்ப்பரெனக் கூறுவது. ஏ : இரண்டும்
பிரிநிலை, ஓ : அசைநிலை. (68)
வாம்பரி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
தாம்பரி வோடுஞ் சூழத் தராதலத் திழிந்து செம்பொற்
காம்பரி தோளி பங்கன் கயிலைமால் வரையுந் தாழ்ந்து
தேம்பரி யலங்கன் மார்பன றென்றிசை நோக்கிச் செல்வான். |
(இ
- ள்.) தேம்பரி அலங்கல் மார்பன் - தேனைத் தாங்கிய
மாலையை யணிந்த மார்பினையுடைய இந்திரன், வாம்பரி உகைத்து -
தாவுகின்ற குதிரையைச்செலுத்தி, தன்னால் வழிபடு குரவன் - தன்னால்
வழிபடப் பட்ட குரவனும், வானோர் - தேவர்களும், பரிவோடும் சூழ -
அன்போடுஞ் சூழ்ந்துவர, தராதலத்து இழிந்து - நிலவுலகத்தி லிறங்கி,
செம்பொன் காம்பு அரிதோளிபங்கன் - சிவந்த பொன்போலும்
நிறத்தினையுடைய மூங்கிலை ஒத்த தோளையுடைய உமாதேவியை ஒரு
பாகத்தில் வைத்த சிவபிரானது, மால் கயிலை வரையும் தாழ்ந்து - பெரிய
கயிலை மலையையும் வணங்கி, தென்திசை நோக்கிச் செல்வான் -
தென்றிசையை நோக்கிச் செல்வானாயினன் எ - று.
வாம்பரி
- வாவும் பரி : ஈறு நிற்றலின் வினைத்தொகையன்று.
குரவனும் வானோரும் என உம்மை விரிக்க. தரையாகிய தலம். காம்பு அரி
என்பன மூங்கில் என்னும் ஒரு பொருளில் வந்த இருசொல்; அரி
துண்டமுமாம். தேம் - தேன். பரிதல் - ஒழுகுதலுமாம். (69)
[-
வேறு]
|
கங்கைமுத
லளவிறந்த தீர்த்த மெலாம்
போய்ப்படிந்து காசி காஞ்சி
அங்கனக கேதார முதற்பதிகள்
பலபணிந்து மவுணற் கொன்ற
பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண
பாசுண்டு பொலிவு மாழ்குந்
திங்களனை யான்கடம்ப வனத்தெல்லை
யணித்தாகச் செல்லு மேல்வை. |
(இ
- ள்) கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எல்லாம் போய்
படிந்து - கங்கை முதலிய அளவற்ற தீர்த்தங்கள் அனைத்திலும் சென்று
நீராடி, காசி காஞ்சி அம் கனக கேதாரம் முதல் - காசியும் காஞ்சியும்
அழகிய பொன்மயமான கேதாரமும் முதலாகிய, பதிகள் பல பணிந்தும் -
பல திருப்பதிகளிற் சென்று வணங்கியும், அவுணன் கொன்ற - அசுரனைக்
கொன்றதனால் வந்த, பொங்கு பழி - மிக்க பாவமானது, விடாது - விடப்
|