I


இந்திரன் பழிதீர்த்த படலம்249



ஒருதுறையில் யாளிகரி புழைக்கைமுகந்
     தொன்றற்கொன் றூட்டி யூட்டிப்
பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன்
     றருத்தியிடும்* பசிநோய் தீர+.

     (இ - ள்.) கல்லா மந்தி - அறிவில்லாத குரங்குகள், அருவி படிந்து
- அருவியில் நீராடி, அருவி எறி மணி எடுத்து - அருவி வீசிய மணியை
எடுத்து, பாறையில் இட்டு - பாறையில் வைத்து, அருவி நீர் தூய் - அருவி
நீரால் ஆட்டி, கரு விரல் கொய்து அலர் சூட்டி - கரிய விரல்களாற்
பறித்துப் பூக்களைச் சூட்டி; கனி ஊட்டி வழிபடுவ - கனிகளை உண்பித்து
வழிபடுவன; ஒரு துறையில் யாளிகரி - ஒரேநீர்த்துறையில் யாளிகளும்,
யானைகளும். புழைக்கைமுகந்து தொளையுடையகைகளால் நீரை மொண்டு,
ஒன்றற்கு ஒன்று ஊட்டி ஊட்டிப் பருகுவன - ஒன்றினுக்கு ஒன்று
ஊட்டிஊட்டிப்பருகா நிற்பன; புலி முலைப்பால் - புலிகள் தங்கள்
முலைப்பாலை, புல்வாய்க் கன்று பசி நோய் தீர அருத்தியிடும் - மான்
கன்றுகள் பசிப்பிணி நீங்க உண்பிக்கும் எ - று.

     மணியைச் சிவலிங்கமாகப் பாவித்து வைத்தென்க. வழிபடுதல் - சிவ
பூசை செய்தல். கல்லா மந்தியும் வழிபடுவன எனத் தலமேன்மை கூறினார்.
கல்லாமை, இயற்கை; ஐங்குறுநூற்றின் குரக்குப் பத்தில், ‘கல்லாக் கடுவன்’,
‘கல்லாமந்தி’, ‘கல்லா வன்பார்ப்பு’ என வருதல் காண்க. யாளி - சிங்கம்
போல்வதும், யானை போற் கையுடையது மாகிய ஒரு விலங்கு. அடுக்குத்
தொழிற் பயில்வு குறித்தது. (72)

நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற்
     கிடந்துயங்கி நெளியப் புள்ளே
றொளியறாச் சிறைவிரித்து நிழல்பரப்பப்
     பறவைநோ யுற்ற தேகொல்
அளியவா யச்சோ+வென் றோதியயன்
     மடமந்தி யருவி யூற்றுந்
துளியநீ்ர் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக்
     கருஙகையினாற் சொரிவ மாதோ.

     (இ - ள்.) நெளி அராக் குருளை - நெளிகின்ற பாம்பின் குட்டிகள்,
வெயில் வெள்ளிடையில் கிடந்து - வெயில் மிக்க வெளியிடங்களிற் கிடந்து,
உயங்கி நெளிய - வருந்திநெளிய, புள் ஏறு - பறவை யேறாகிய கருடன்,
ஒளி அறாச் சிறை விரித்து நிழல் பரப்ப - ஒளி நீங்காத சிறைகளை விரித்து
நிழலைப் பரப்ப, அயல் மடமந்தி - பக்கத்திலுள்ள அறியாமையையுடைய
குரங்குகள், அளியவாய் - கருணை யுடையனவாய், அச்சோ - ஐயோ, பறவை
நோய் உற்றதே கொல் என்று ஓதி - இந்தக் கருடன் வெயிலால்
துன்பமடைந்ததோ என்று கூறி, அருவி ஊற்றும் துளிய நீர் - அருவிகள்
சொரிகின்ற துளிகளையுடைய நீரை, வளை தசும் பின் - சங்காகிய குடத்தில்,
கருங்கையினால் முகந்து எடுத்துச் சொரிவ - கரிய கையினால் மொண்டு
எடுத்துச் சொரியா நிற்பன எ - று.


     (பா - ம்.) * அருந்தியிடும். +பசிகடீர. +அளியவாவச்சோ.