"முழுமுத லேயைம்
புலனுக்கு மூவர்க்கு மென்றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக்
கெழுமுத லேயரு டந்திருக்க இரங்குங் கொல்லோவென்
றழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே" |
எனவும் அவர் பாடியருளிய
திருவாசகத்தானறிக.
மாணிக்கவாசகர்
வரலாறு : - பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே
அமாத்தியர் குலத்திற்பிறந்த வாதவூரர் பதினாறாண்டினுள் எண்ணெண்
கலையும் பயின்று பாண்டிவேந்தனுக்கு முதலமைச்சராய்த் திகழ்ந்து, குதிரை
வாங்குதற்குப் பெரும் பொருளுடன் புறப்பட்டுச் சென்று, திருப்பெருந்
துறையிலே குருந்தமரத்தினடியில் தம்மை ஆட்கொள்ளுதற்காக
எழுந்தருளியிருந்த பரமசிவனாகிய குருமூர்த்தியைத் தரிசித்து அருள்பெற்று,
நெஞ்சம் அனலிடைப்பட்ட மெழுகென உருக அன்பினாலழுது பாமாலை
பாடிச் சாத்தி, மாணிக்கவாசகர் என்னும் திருப்பெயர் ஆசாரிய மூர்த்தியாகிய
பரமசிவனால் அளிக்கப் பெற்றுத், தம்பொருட்டாகப் பெருமான் பல
திருவிளையாடல் புரியத் தாம் தலந்தோறுஞ் சென்று திருவாசகமும்,
திருக்கோவையும் பாடிச் சிதம்பரத்திலே சபாநாதர் திருவடியிற் கலந்தருளினர்
என்பது. இவ் வரலாற்றின் விரிவை இப் புராணத்திலுள்ள வாதவூரடிகளுக்
குபதேசித்த படலம் முதலிய நான்கு படலங்களானும், திருவாதவீரர் புராணம்,
திருப்பெருந்துறைப் புராணம் முதலியவற்றானும் அறிக. (21)
சண்டேசுரரும்,
மற்றை அடியார்களும்
[வேறு]
|
தந்தைதா
ளொடும்பிறவித் தாளெறிந்து
நிருத்தரிரு
தாளைச் சேர்ந்த
மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி
பத்திநெறி
வழாது* வாய்மெய்
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச்
சிவாநுபவச்
செல்வ ராகிப்
பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்
தாள்பரவிப்
பணிதல் செய்வாம். |
(இ
- ள்.) தந்தை தாளொடும் - தந்தையாரின் அடியோடு, பிற
வித்தாள் எறிந்து - பிறவிவேரையும் களைந்து, நிருத்தர் இருதாளைச்
சேர்ந்த - திரு நிருத்தஞ் செய்யும் இறைவனின் திருவடிகளை அடைந்த,
மைந்தர் தாள் - சண்டேசுர நாயனாரின் திருவடிகளையும், வேதநெறி -
வேதநெறியிலும், சைவநெறி - சைவநெறியிலும், பத்தி நெறி - பத்தி
நெறியிலும், வழாது - வழுவாது, வாய் மெய் சிந்தை - வாக்கு மெய் மனம்
ஆகிய ன்று கரணங்களையும், அரன் அடிக்கே - சிவபிரான்
திருடிகளிலேயே, செலுத்தினராய் - செருத்தினவர்களாய், சிவாநுபவச்
செல்வராகி - சிவாநுபூதிமான்களாகி, பந்தம் ஆ தொடக்கு அறுத்த -
(பா
- ம்.) * பத்திநெறி வளர்ந்து.
|