புள்
ஏறு - பறவைகளுக் கிறையாய கலுழன். கொல் : ஐயப் பொருட்டு.
உற்றதே கொல் என்று கருதி, அச்சோவென் றோதி என்னலுமாம். அச்சோ :
இரக்கக் குறிப்பையுணர்த்தும் இடைச்சொல். அளியவா வச்சோ என்னும்
பாடத்திற்கு அளிய ஆ அச்சோ என்று ஓதி எனப் பிரித்துப் பொருள்
கொள்க; இதில் அளியது என்னும் துவ்வீறு குறைந்ததெனல் வேண்டும்.
மாது, ஓ : அசை. (73)
படவரவ மணியீன்று
நொச்சிப்பா
சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை
பெடைதழுவி மணஞ்ய்ய மணவறையில்
விளக்கிடுவ பெருந்தண் கானத்
தடர்சிறைமென் குயிலோமென் றார்ப்பமடக்
கிள்ளையெழுத் தைந்து மோசைத்
தொடர்புபெற வுச்சரிப்பக் குருமொழிகேட்
டாங்குவப்ப தொடிக்கட் பூவை. |
(இ
- ள்.) நொச்சி பசு இலை அன்ன - நொச்சியின் பசிய (பிளந்த)
இலையை ஒத்த, பைந்தாள் மஞ்ஞை - பசிய (பிளந்த) கால்களையுடைய
மயில்கள், பெடை தழுவி மணம் செய்ய - பெண்மயில்களைக் கூடி மணஞ்
செய்யா நிற்க, மணஅறையில் - மணஞ் செய்யும் அவ்விடத்தில். பட அரவம்
- படத்தினையுடையபாம்புகள், மணிஈன்றுவிளக்கு இடுவ - மணிகளை
உமிழ்ந்து விளக்கிடுவன; அடர்சிறைமென் குயில் - அடர்ந்த சிறகினையுடைய
மெல்லிய குயில்கள், பெருந்தண் கானத்து - பெரிய குளிர்ந்த காட்டின்கண்,
ஓம் என்று ஆர்ப்ப - ஓ மென்று ஒலிக்கா நிற்கவும், மடக்கிள்ளை -
இளமையுடையகிளிகள், எழுந்து ஐந்தும் - திருவைந் தெழுத்தினையும், ஓசைத்
தொடர்பு பெற - ஓசையின் தொடர்ச்சிபெற, உச்சரிப்ப - உச்சரிக்கவும்,
தொடி கண் பூவை - வளைபோன்ற வட்ட மாகிய கண்களையுடைய
நாகணவாய்ப் பறவைகள், குருமொழிகோட் டாங்கு உவப்ப - குரு
மொழியைக் கோட்டு மகிழ்வது போல் (அவற்றைக் கேட்டு) மகிழ்வன
எ - று.
அடர்
- தகடுமாம். ஓமென்றார்த்தல் - பிரணவ வொலிசெய்தல்.
திருவைந் தெழுத்தை விதிப்படி உச்சரிக்க என்றவாறு. அவற்றைக் குருவின்
உபதேசமாகக் கேட்டு என விரித்து, ஆங்கு என்பதற்கு அவ் விடத்தில்
எனப் பொருள் கூறலுமாம். இடுவ, உவப்ப என்பன அன்பெறாத பலவின்பால்
முற்றுக்கள். (74)
இன்னவிலங்
கொடுபுள்ளின் செயற்கரிய
செயனோக்கி யிறும்பூ தெய்திப்
பொன்னகரான் புளகமுடல் புதைப்பநிறை
மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான்
அன்னபொழு தொற்றுவர்மீண் டடிவணங்கி
யின்சுவைப்பா லருந்து வான்முன்
பின்னரிய* தேன்சொரிந்தாங் குவகைமேற்
பேருவகை பெருகச் சொல்வார். |
(பா - ம்.) * பின்னறிய.
|