I


இந்திரன் பழிதீர்த்த படலம்251



     (இ - ள்.) விலங்கொடு புள்ளின் - மிருகங்களோடு பறவைகளின்,
இன்ன செயற்கு அரிய செயல் நோக்கி - இத்தன்மையவான செயற் கருஞ்
செயல்களைக் கண்டு, இறும்பூது எய்தி - வியப்புற்று, புளகம் உடல் புதைப்ப
- புளகமானது உடல் முழுதையும் போர்க்கவும், நிறை மகிழ்ச்சி உளம்புதைப்ப
- நிறைந்த களிப்பானது உள்ளத்தை மூடவும், போவான் பொன் நகரான் -
செல்கின்றவனாகிய பொன் நகரத்தை யுடைய இந்திரனுக்கு, அன்ன பொழுது
- அப்பொழுது, இன் சுவைப் பால் அருந்துவான் முன் - இனிய
சுவையையுடைய பாலைப் பருகுகின்றவன் முன்னர், பின் அரிய தேன்
சொரிந்தாங்கு - பின்பு கிடைத்தற்கரியதேனைப் பொழிந்ததுபோல,
உவகைமேல் பேருவகை பெருக - மகிழ்ச்சிமேல் பெரு மகிழ்ச்சி மிக,
ஒற்றுவர் மீண்டு அடிவணங்கிச் சொல்வார் - தூதுவர் திரும்பி வந்து அடியில்
வணங்கிக் கூறுவாராயினர் எ - று.

     ஒடு : எண்ணொடு. புளகம் - மயிர் முகிழப்பு. அன்ன பொழுது -
அப்பொழுது : சுட்டு. நறிய என்னும் பாடத்திற்கு நன் மணமுள்ள என்று
பொருள் கூறிக்கொள்க. (75)

எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா
     வதிசயமு மெண்ணுக் கெய்தாத்
திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று
     கண்டுவகை திளைத்தே மங்கண்
வைப்பனைய வொருபுனித வாவிமருங்
     கொருகடம்ப வனத்தி னீழல்
ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க
     மொன்றுளதென் றுரைப்பக் கேட்டான்.

     (இ - ள்.) எப்புவனத்திலும் என்றும் கண்டு அறியா அதிசயமும் -
எந்த உலகத்திலும் எக்காலத்திலும் கண்டறியாத வியப்பும், எண்ணுக்கு
வய்தாத் திப்பியமும் - அளவைக்கு எட்டாத சிறப்பும், இக் கடம்ப வனத்து -
இக்கடம்ப வனத்தின்கண், இன்று கண்டு உவகை திளைத்தேம் - இன்று
பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கினோம்; (என்ன வெனில்), அங்கண் -
அவ்விடத்து, வைப்பு அனைய - சேம நிதிபோன்ற, ஒரு புனித வாவி
மருங்கு - ஒரு தூய தீர்த்தக் கரையின் பக்கத்தில், ஒரு கடம்ப வனத்தின்
நீழல் - ஒரு கடம்ப மரத்தின் நீழலில், ஒப்பு இல் ஒளியாய் முளைத்த -
ஒப்பற்ற ஒளிப் பிழம்பாய்த் தோன்றிய, சிவலிங்கம் ஒன்று உளது என்று -
சிவலிங்கம் ஒன்று இருக்கிறதென்று, உரைப்பக் கேட்டான் - சொல்லக்
கேட்டான் எ - று.

     எண்ணுக்கு - கருதலுக்கு என்றுமாம். ஒரு கடம்ப வனம் - ஒரு
கடம்பமரம்; மரம் என்று பாடமிருத்தல் சிறப்பு. ஒற்றுவர் உரைப்ப இந்திரன்
கேட்டானென்க. (76)

செவித்தொளையி லமுதொழுக்கு முழையரொடும்
     வழிக்கொண்டு சென்னி மேற்கை
குவித்துளமெய் மொழிகரணங் குணமூன்று
     மொன்றித்தன் கொடிய பாவம்*

     (பா - ம்.) * கொடிய பாசம்.