அவித்துளயர் வொழிக்கமுளைத் தருள்குறிமே
லன்பீர்ப்ப வடைவான் கானங்
கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத்
துழைநுழைந்தான் கவலை தீர்வான். |
(இ
- ள்.) செவித் தொளையில் அமுது ஒழுக்கும் உழையரொடும் -
(இங்ஙனம்) செவித்தொளையின்கண் அமுதத்தைப்பொழகின்ற ஒற்ற ரோடும்,
வழிக்கொண்டு - சென்று, சென்னிமேல் கைகுவித்து - முடியின்மீது கைகூப்பி,
உளம் மெய் மொழி - உளம் உடல் உரைகளும், கரணம் - அந்தக்
கரணமும், குணம் மூன்றும் - முக்குணங்களும், ஒன்றி - ஒரு வழிப்பட்டு,
தன் கொடிய பாவம் அவித்து - தனது கொடிய கொலைப் பாவமாகிய தீயைத்
தணித்து, உள் அயர்வு ஒழிக்க - மனத் துயரத்தைக் கெடுக்க, முளைத்தருள்
குறிமேல் - தோன்றி யருளிய அருட் குறியாகிய சிவலிங்கத்தின் மீது, அன்பு
ஈர்ப்ப - அன்பானது இழுக்க, அடைவான் - செல்லும் இந்திரன், கானம்
கவித்துள - காட்டினாற் கவியப்பட்டுள்ள, பூந்தடம் படிந்து -
பொற்றாமரைத்தீர்த்தத்தில் நீராடி, கடம்பவனத்து உழை நுழைந்தான் -
கடம்பவனத்துட் புகுந்து, கவலை தீர்வான் - துன்பம் நீங்குவானாயினன்
எ - று.
அமுதுபோல்
இன்பஞ் செய்யும் மொழிகளை அமுதென்றார்.
மொழிக்கரணம்என்றிருப்பின் மூன்று என்பதனை அதனொடுங் கூட்டி, உளம்
உடல் உரையென்னும் கரண மூன்றும் எனப்பொருள் கொள்ளல் சாலும்.
அந்தக் கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. முக்குணம் -
சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன. ஒன்றி - ஒன்ற என்பதன் றிரிபுமாம்.
அடைவான் : பெயர். கவித்து, கவிந்து என்பது வலித்த தென்னலுமாம்.
நுழைந்தான் : முற்றெச்சம். (77)
அருவாகி யுருவாகி யருவுருவங்
கடந்துண்மை யறிவா னந்த
உருவாகி யளவிறந்த வுயிராகி
யவ்வுயிர்க்கோ ருணர்வாய்ப் பூவின்
மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன்
னிடையுதித்து மடங்க நின்ற
கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா
யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான். |
(இ
- ள்.) அருவு ஆகி - அருவமாகியும், உருவு ஆகி -
உருவமாகியும், அருவுருவம் (ஆகி) - அருவுருவமாகியும், கடந்து இவற்றைக்
கடந்து, உண்மைஅறிவு ஆனந்த உருஆகி - சச்சிதானந்த வடிவாகியும்,
அளவு இறந்த உயிர் ஆகி - எண்ணிறந்த உயிர்களாகியும், அவ் உயிர்க்கு
ஓர் உணர்வு ஆய் - அவ்வுயிர்களின் அறிவுக்கோர் அறிவாகியும் (நிற்றலின்),
பூவின் மரு ஆகி - மலரின் மணம்போலாகியும், சராசரங்கள் அகிலமும் -
சரமும் அரசமுமாகிய அனைத்தும், தன் இடை உதித்து மடங்க நின்ற கரு
ஆகி - தன்னிடத்துத் தோன்றி அடங்க நின்ற மூல காரணமாகியும்,
முளைத்த சிவக்கொழுந்தை - தோன்றியருளிய சிவக் கொழுந்தினை,
|