I


இந்திரன் பழிதீர்த்த படலம்253



ஆயிரம் கண்ணும் களிப்பக் கண்டான் - ஆயிரங்கண்களும் களிக்கும்படி
பார்த்தான் எ - று.

     அரு, உரு எனப் பிரித்தலுமாம். அருவம் - சிவம், சத்தி, நாதம், விந்து
என்பன. உருவம் - மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்பன.
அருவுருவம் - சதாசிவம். ஆகி என்பதனை அருவுருவம் என்பதனோடும்
கூட்டுக. இம் மூன்றும் இறைவற்குத் தடத்தவிலக்கணம்,; இவற்றைக் கடந்து
நின்றது சொரூப விலக்கணம்; இவ்வியல்பினை,

"உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோ மருவுரு வான போது
திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் விளைவு காணே"

என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா லறிக. ‘அளவிறந்த வுயிராகி
அவ்வுயிங்ாகோ ருணர்வாய்ப் பூவின் மருவாகி’ என்றது இறைவன்
உணிர்களிடத்து ‘உடலுயிர் கண்ணருக்கன் அறிவொளி’ போல் நிற்கு
முறைமை கூறியவாறு. கரு - காரணம். (78)

கண்டுவிழுந் தெழுந்துவிழ துளிப்பவெழு
     களிப்பென்னுங் கடலி* லாழ்ந்து
விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப
     வன்புருவாய் விண்ணோர் வேந்தன்
அண்டர்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப
     பரணமெலா மகல்வா னெய்திக்
கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப்
     பின்னுமொரு குறைவு தீர்ப்பான்.

     (இ - ள்.) கண்டு விழுந்து எழுந்து - பார்த்துக் கீழே விழுந்து
வணங்கி எழுந்து, விழி துளிப்ப - கண்கள் அன்பு நீர் துளிக்க, எழு களிப்பு
என்னும் கடலில் ஆழ்ந்து - (கரையின்றி) எழுகின்ற மகிழ்ச்சி யென்னும்
கடலில் மூழ்கி, தழு தழுப்ப மொழி விண்டு - நாத் தழு. தழுக்கத் துதிகள்
கூறி, உடல் பனிப்ப அன்பு உருவாய் - உடல் நடுங்க அன்பு வடிவாடிக,
விண்ணோர் வேந்தன் - தேவேந்தரன், அண்டர் பிரான் அருச்சனைக்கு -
தேவர்கள் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின் அருச்சனைக்கு, வேண்டும்
உபகரணம் எலாம் வேண்டிய பொருள்களனைத்தும், அகல்வான்
எய்தக்கொண் வர - அகன்ற விண்ணுலகிற்சென்று கொண்டு வருமாறு,
சிலரை விடுத்து - சில தேவர்களை ஏவி, அவர் ஏக - அவர் செல்ல,
பின்னும் ஒரு குறைவு தீர்ப்பான் - பின்பும் ஒரு குறையினை நீக்குவானாய்
எ - று.

     எழு என்பதனை இரட்டுற மொழிதலாக்கி எழுகடல் என
இயைத்தலுமாம். விண்டு - கூறி. நாவென்பது வருவிக்க. குறைவு தீர்த்தல் -
விமானம் அமைத்தல். (79)


     (பா - ம்.) * களியென்னுங் கடலில்.