I


இந்திரன் பழிதீர்த்த படலம்255



நீங்காத்தன் பிணி நோய் தணிய - நீங்காத தன் பழியாகிய நோய் கெடுமாறு,
முளைத்து எழுந்த - தோன்றியருளிய, முழுமுதல் மருந்தின் தன் பால் வந்து
- முழுமுதலாகிய மருந்திடம் வந்து எ - று.

     தலை சிறத்தல் - மிகுதல்; ஒரு சொல். ஆடினான் என்பதற்குக்
கூத்தாடினான் என்றுரைப்பாருமுளர்; மேல், பின்னுங் குடைந்து என
வருதலின் அது பொருளன்றென்க. என்பது இடைச்சொல். மீண்டு நீங்காத
என்னலுமாம். பிணி நோய் - ஒருபொரு ளிருசொல். முழு முதல் - எல்லா
முதன்மையுமுடைய முதற் பொருள்; மருந்துச் செடியின் முதலெனவும்
பொருள் தோன்றுதல் காண்க. தன் : அசை. (81)

மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி
     வருமளவின் முளைத்த ஞான
வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடியிற்
     பரிதிகர மெல்லத் தீண்டச்
சித்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத்
     தங்கணிழல் செய்வா னுள்ளம்
வைத்தனனப் போதிரவி மண்டலம்போ
     லிழிந்ததொரு மணிவி மானம்.

     (இ - ள்.) மொய்த்த புனக்காடு எறிந்து - நெருங்கிய காடுகளை
வெட்டி, நிலம் திருத்தி வரும் அளவில் - நிலத்தைத் திருத்தி வரும்
பொழுதில், முளைத்த ஞானவித்து அனைய - தோன்றிய ஞானவித்தை ஒத்த,
சிவப்கொழுந்தின் திருமுடிமேல் - சிவக்கொழுந்தினது திருமுடியின்கண்,
பரிதிகரம் மெல்ல தீண்ட - சூரியனது ஒளி மெல்லப்படுதலால், இந்திரன்
சித்தம் நெகிழ்ந்து - இந்திரனானவன் தனது மனம் வருந்தி, தன் திங்கள்
வெண்கவிகை நிழல் செய்வான் - தனது சந்திரனை யொத்த வெண்
கடையினால் நிழலைச் செய்ய, உள்ளம் வைத்தனன் - கருதினான்; அப்போது
இரவி மண்டலம்போல் - அதுகாலை சூரிய மண்டலம் போல், ஒரு மணி
விமானம் இழிந்தது - ஒரு மாணிக்க விமானம் இறங்கியது எ -று.

     மரங்கள் மொய்த்த வென்க. புனக்காடு - ஒருபொரு ளிருசொல்.
புனமென்பதைக் கொல்லையாக்கிப் புனத்தினையுடைய காடென்னலுமாம்.
வித்தனைய கொழுந்தென்றது பொருள் முரண். கொழுந்தாகலின் தீண்டியதற்
காற்றாது சித்தநெகிழந்தான் என்னும் நயந்தோன்றுதல் காண்க. கரம் -
கிரணம், கை. கவிகையாகிய திங்களென்னலுமாம். உள்ளம் வைத்தல் -
சிந்தித்தல்; ஒரு சொல். திங்கள் இரவி என்னும் முரணுங் காண்க. (82)

கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும்
     புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு
     மெட்டெட்டுக் கணமுந் தாங்க