I


256திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



விரியெட்டுத் திரைபரப்ப மயனிருமித்
     துதவியவவ் விமானஞ் சாத்தி
அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை
     யருச்சிப்பா னாயி னானே.*

     (இ - ள்.) எட்டுக் கிரியும் என - எட்டு மலைகளும் என்னும்படி,
மழையை கிழித்து எட்டும் - முகிலைக் கிழித்து மேலோங்கும், புழை கை -
தொளையினையுடைய துதிக்கையினையும், மதிக்கீற்றுக் கோட்டு சந்திரனது
பிளவுபோன்ற கொம்பினையுமுடைய, கரி எட்டும் - எட்டு யானைகளும்,
நால்எட்டுச் சினம் மடங்கலும் - முப்பத்திரண்டு கோபத் தினையுடைய
சிங்கங்களும், எட்டெட்டுக் கணமும் தாங்க - அறுபத்து நான்கு
சிவகணங்களும் தாங்க, விரி எட்டுத் திசை பரப்ப - விரிந்த எட்டுத்
திக்குகளிலும் பரவி நிற்க, மயன் நிருமித்து உதவிய -தேவ தச்சனால்
ஆக்கிக் கொடுக்கப்பட்ட, அவ்விமானம் அரி சாத்தி - அந்த விமானத்தை
இந்திரனானவன் சாத்தி, எட்டுத் திரு உருவப் பரஞ் சுடரை - எட்டுத்
திருவுருவங்களையுடைய பரஞ்சோதியை, அருச்சிப்பான் ஆயினான் -
அருச்சனை செய்வானாயினன் எ - று.

     கிரி எட்டு - குலமலை யெட்டு; அவை முற் கூறப்பட்டன, எட்டுத்
திசையும் என்னும் உம்மை தொக்கது. நிருமித்தல் - மனத்தால் நினைந்து
செய்தல். சாத்துதல் - இறைவற்கு இருக்கையாக வமைத்தல். அரி -
இந்திரன். எட்டுத் திருவுருவம் - அட்ட மூர்த்தம்; ஐம்பூதம் : ஞாயிறு,
திங்கள், ஆன்மா என்பன. ஏ : அசை; சொற்பின் வருநிலை. (83)

முந்தவம லுலகடைந்து பூசனைக்கு
     வேண்டுவன முழுதுந் தேர்வார்
வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை
     மின்னுமிழு மணிப்பூண் வாசச்
சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந்+
     திருப்பள்ளித் தாமந் தீபம்
அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன்
     றிருவமுத மனைத்துந் தந்தார்.

     (இ - ள்.) முந்த அமர் உலகு அடைந்து - முதலில் தேவருலகிற்
சென்று, பூசனைக்கு வேண்டுவன முழுதும் - பூசைக்கு வேண்டிய
பொருள்கள் அனைத்தும், தேர்வார் - தேடலுற்றவர்கள், வந்து - மீண்டு
வந்து, ஐந்து த ரு ஈன்ற பொன் ஆடை - ஐந்தருக்களும் கொடுத்த
பொன்னாடையும், மின் உமிழும் மணிப்பூண் - ஒளியை வீசும் மணியாலாகிய
அணிகலன்களும், வாசச் சந்தனம் - மணம் பொருந்திய சாந்தமும், மந்தாகினி
மஞ்சனம் - கங்கை நீராகிய திருமஞ்சனமும், தூபம் - நறும்புகையும்,
திருப்பள்ளித் தாமம் - திருப்பள்ளித் தாமமும், தீபம் - திருவிளக்கும்,
அந்தம் இல் ஆன் ஐந்து - அழிவில்லாத பஞ்சகவ்வியமும், நறுகனி - இனிய
பழங்களும். தீந்தேன் - மதுரமாகிய தேனும், திருவமுதம்