I


இந்திரன் பழிதீர்த்த படலம்257



அனைத்தும் தந்தார் - திருவமுதும் ஆகிய இவை அனை்ததையும்
கொடுத்தார்கள் எ - று.

     அமரருலகு என்பது அமருலகு என விகாரமாயிற்று. தருவைந்தும்
என்னும் உம்மை தொக்கது. மந்தாகினி - ஆகாய கங்கை. திருப்
பள்ளித்தாமம் - மலர் மாலை. (84)

தெய்வத்தா மரைமுளைதத தடம்படிந்து
     பவந்தொலைக்குந் திருநீ றாடிச்
சைவத்தாழ வடந்தாங்கி யன்புருவா
     யருளுருவந் தானாய்த் தோன்றும்
பைவைத்தா டரவார்த்த பசுபதியை
     யவனுரைத்த பனுவ லாற்றின்
மெய்வைத்தா தரம்பெருக வருச்சனைசெய்
     தானந்த வெள்ளத் தாழ்ந்தான்.

     (இ - ள்.) தெய்வத் தாமரை முளைத்த தடம் படிந்து - தெய்வத்
தன்மை பொருந்திய பொற்றாமரை முளைத்த தடாகத்தில் நீராடி, பவம்
தொலைக்கும் திருநீறு ஆடி - பிறவியைப் போக்கும் திருநீறு தரித்து,
சைவத் தாழ்வடம் தாங்கி - சைவ வேடத்திற்குரிய உருத்திராக்க மாலையை
அணிந்து, அன்பு உருவாய் - அன்பே வடிவாய், அருள் உருவம் தானாய்த்
தோன்றும் - அருள்வடிவமாகத் தோன்றுகின்ற, பைவைத்து ஆடு அரவு
ஆர்த்த - படமெடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கட்டிய, பசு பதியை -
பசுக்களுக்கெல்லாம் பதியாகிய இறைவனை, அவன் உரைத்த பனுவல்
ஆற்றின் - அவன் திருவாய் மலர்ந்தருளிய ஆகம வழியால், மெய் வைத்த
ஆதரம் பெருக - உண்மையான அன்பானது பெருக, அருச்சனை செய்து
ஆனந்த வெள்ளத்து ஆழ்ந்தான் - அருச்சனை புரிந்து இன்பவெள்ளத்தில்
மூழ்கினான் எ - று.

     அன்புருவாய் அருச்சனைசெய்து ஆழ்ந்தான் என முடிக்க;
அன்புருவாய் என்பதனை இறைவனுக்கேற்றித் தோன்றும் என்பதனோடு
முடித்தலுமாம். பனுவல் - ஆகமம். மெய்வைத்த என்பதில் அகரந்
தொக்கது. (85)

பாரார வட்டாங்க பஞ்சாங்க
     விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்
நேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக்
     கும்பிட்டு நிருத்தஞ செய்து
தாராருந் தொடைமிதப்ப வானந்தக்
     கண்ணருவி ததும்ப நின்றன்
பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத்
     துதிக்கின்றா னமரர் கோமான்.