I


இந்திரன் பழிதீர்த்த படலம்261



     நீங்கா, வெய்ய என்னும் பெயரெச்சங்கள் பழியென்பதனோடு தனித்தனி
முடியும். மாய்ந்து - மாயப்பெற்று; சினைவினை முதன்மேல் நின்றதுமாம்.
உம்மை வியப்புணர்த்திற்று. ஒ : அசை. (92)

இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்
துன்னடி யாருள் யானும் மோரடித் தொண்ட னாவேன்
அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த
மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து.

     (இ - ள்.) இவ்வாறே - இப்படியே, இன்ன நின் பாதப்போதே - இந்த
நின் திருவடித் தாமரைகளையே, என்றும் பூசித்து - எப்பொழுதும் வழிபட்டு,
உன் அடியாருள் - நின் தொண்டருள்ளே, யானும் ஓர் அடித்தொண்டன்
ஆவேன் - அடியேனும் ஓர் தாழ்ந்த தொண்ட னாவேன்; அன்னதே -
அதுவே, அடியேன் வேண்டத்தக்கது என்று - அடியேனால் வேண்டத்தகுவது
என்று, அடியில் வீழ்ந்த மன்னவன் தனக்கு - திருவடிகளில் வீழ்ந்து
வணங்கிய இந்திரனுக்கு, முக்கண் வரதனும் கருணை பூத்து - மூன்று
கண்களையுடைய வள்ளலும் அருள் சுரந்து எ - று.

     அடித்தொண்டன் - தாழ்ந்த தொண்டன்; ‘அருட்பெருந் தீயி லடியோ
மடிக்குடில்’ எனத் திருவாசகத்திலும, ‘அடியே னடிவண்ணான்’ எனத்
திருத்தொண்டர் புராணத்திலும் அடியென்பது தாழ்மையைக் குறித்தல்
காண்க. வரதன் - வேண்டியவற்றை வழங்குவோன். (93)

[எழுசீரடியாசிரியவிருத்தம்]
இருதுவிற் சிறந்த வேனிலு மதியா
     றிரண்டினிற் சிறந்தவான் றகரும்
பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந்
     திதியினிற் சிறந்தபூ ரணையும்
மருவுசித் திரையிற் சித்திரை தோறும்
     வந்துவந் தருச்சியோர் வருடந்
தெரியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ்
     செய்தவர்ச் சனைப்பய னெய்தும்.

     (இ - ள்.) இருதுவில் சிறந்த வேனிலும் - பருவங்களுள் உயர்ந்த
வேனிற் பருவமும், மதி ஆறிரண்டினில் - மாதம் பன்னிரண்டனுள், சிறந்த
வான் தகரும் - மிகச்சிறந்த சித்திரை மாதமும், பொருவு இல் தாரகையில் -
ஒப்பற்ற நாண்மீன்களுள், சிறந்த சித்திரையும் - உயர்ந்த சித்திரை நாளும்,
திதியினில் சிறந்த பூரணையும் - திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், மருவு -
(ஆகிய இவைகள்) கூடிய, சித்திரையில் சித்திரை தோறும் - சித்திரைத்
திங்களின் சித்திரை நாள்தோறும், வந்து வந்து அருச்சி - வந்து வந்து
வழிபடுவாயாக, ஓர் வருடம் தெரியும் - ஓர் ஆண்டுக்கு வரையறுத்து, நாள்
முந்நூற்று அறுபதும் ஐந்தும் - முந்நூற் றறுபத்தைந்து நாட்களிலும்,
அர்ச்சனை செய்த பயன் எய்தும் - அருச்சனை செய்தலால் வரும் பயன்
(உன்னை) அடையும் எ - று.