இருது
- பருவம்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் என்பன; ஈண்டுக் கூறியது இளவேனிலை. தகர் - ஆடு;
மேடம். தாரகை - அசுவதி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்கள்
சித்திரையிற் சித்திரை யென்றது அநுவாதம்.
(94)
துறக்கநா
டணைந்து சுத்தபல் போகந்
துய்த்துமேன் மலபரி பாகம்
பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவர்
பெரும்பதத் தாசையும் பிறவும்
மறக்கநாம் வீடு வழங்குது மென்ன
வாய்மலர்ந் தருளிவான் கருணை
சிறக்கநால் வேதச் சிகையெழு மனாதி
சிவபரஞ் சுடர்விடை கொடுத்தான். |
(இ
- ள்.) துறக்க நாடு அணைந்து - துறக்க வுலகத்தையடைந்து,
சுத்த பல்போகம் துய்த்து - தூய பல போகங்களை நுகர்ந்து, மேல் - பின்,
மல பரிபாகம் பிறக்க - மலபரிபாகம் உண்டாக, நான்முகன் மால் முதல் -
பிரமன் திருமால் முதலிய, பெருந் தேவர் பெரும் பதத்து ஆசையும் - பெரிய
தேவர்களின் பெரும்பதவியிலுள்ள விருப்பமும், பிறவும் மறக்க - மற்றைய
விருப்பமும் ஒழிய, நாம் வீடு வழங்குதும் என்ன வாய்மலர்ந்தருளி - நாம்
வீடுபேற்றை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தருளி, வான் கருணை
சிறக்க - சிறந்த அருள் ததும்ப, நால்வேதச் சிகை எழும் - நான்கு
மறைகளின் முடிவில் விளங்கும். அனாதி சிவபரஞ் சுடர் - அனாதியாகிய
சிவபரஞ்சோதி, விடைகொடுத்தான் - விடைகொடுத் தனுப்பினான் எ - று.
மல
பரிபாகம் - ஆணவமல நெகிழ்ச்சி; இருவினை யொப்பும், சத்தி
நிபாதமும் உபலக்கணத்தாற் கொள்க. பிறக்க, காரணப்பொருட்டு. மறக்க -
மறந்தவளவில். சிகை - முடி; அதர்வசிகை என்பது காண்க. (95)
மூடினான் புளகப் போர்வையால் யாக்கை
முடிமிசை யஞ்சலிக் கமலஞ்
சூடினான் வீழந்தா னெழுந்துகண் ணருவி
துளும்பினான் பன்முறை துதிசெய்
தாடினா னைய னடிபிரி வாற்றா
தஞ்சினா னவனரு ளாணை
நாடினிான் பிரியா விடைகொடு
துறக்க நண்ணினான் விண்ணவர் நாதன். |
(இ
- ள்) விண்ணவர் நாதன் - தேவேந்திரன், புளகப் போர்வை யால்
யாக்கை மூடியான் - புளகமாகிய போர்வையினால் உடல் மூடப் பட்டான்;
முடிமிசை - சென்னியின்மேல், அஞ்சலிக் கமலம் சூடினான் -
கைத்தாமரைகளைக் கூப்பினான்; வீழந்தான் - கீழேவிழுந்து வணங்கினான்;
|