I


266திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சங்கலறச் செங்களத்துத் தானவரைத் தேய்த்துவிறற்
கொங்கலர்தார் வேய்ந்தமரர் கோமான்றன் கோநகரிற்
செங்க ணமரர்பெருஞ் சேனைக் கடல்கலிப்ப
மங்கலப்பல் லாண்டு மறைமுழங்க வந்தணைவான்.

     (இ - ள்.) சங்கு அலற - வெற்றிச் சங்க முழங்க, செங்களத்து -
போர்க்களத்தில், தானவரைத் தேய்த்து - அவுணர்களை அழித்து, கொங்கு
அலர் - மணம் பரந்த, விறல் தார் வேய்ந்து - வெற்றி மாலை சூடி, அமரர்
கோமான் - தேவேந்திரன், தன் கோ நகரில் - தனது தலை நகராகிய
அமராவதியில், பெரு செங்கண் அமரர் சேனைக் கடல் கலிப்ப - பெரிய
சிவந்த கண்களையுடைய தேவர் சேனையாகிய கடல் (ஒருபால்) ஒலிக்கவும்,
மங்கலப் பல்லாண்டு மறை முழங்க - மங்கலமாகிய பல்லாண்டும் வேதமும்
(ஒருபால்) ஒலிக்கவும், வந்தணை வான் - வருகின்றவன் எ - று.

     செங்களம் - போர்க்களம்; ‘செங்களந் துழவுவோள்’ என்பது புறம்.
கொங்கு - தேனும். பராகமும் ஆம். விறற்றார் எனக் கூட்டுக. வேய்ந்த
என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்க தென்னலுமாம். கோநகர் -
தலைநகர், அரசநகர். பல்லாண்டு - பல ஆண்டுகள் வாழ வேண்டுமென
வாழ்த்தும் பாட்டு. எண்ணும்மை விரிக்க. (5)

எத்திக்குங் கல்லென் றியங்கலிப்ப வேந்திழையார்
தித்தித் தமுதொழுக்குங்* கீதஞ் செவிமடுப்பப்
பத்திக் கவரிநிறை தானைப் படுகடலில்
தத்திப் புரளுந் திரைபோற் றரைப்பனிப்ப.

     (இ - ள்.) எத்திக்கும் கல்லென்று - எல்லாத் திசைகளிலும்
கல்லென்னும் ஒலியோடு, இயம் கலிப்ப - இயங்கள் ஒலிக்கவும், ஏந்து
இழையார் - ஏந்திய அணிகளையுடைய தேவ மகளிரின், தித் தித்து அமுது
ஒழுக்கும் - இனிமையுற்று அமுதத்தினைப் பொழியும், கீதம் செவி மடுப்ப -
இசைப்பாட்டுச் செவியின் கண் ஏறவும், பத்திக் கவரிநிரை - வரிசையாகிய
சாமரைக் கூட்டங்கள், தானைப் படுகடலில் - சேனையாகிய ஆழமுள்ள
கடலின்கண், தத்திப் புரளும் திரை போல் தலைபனிப்ப - தவழ்ந்து
புரளுகின்ற அலைகளைப்போல அசையவும் எ - று.

     இயம் - வாச்சியம். தித்தித்த என்பது விகாரமாயிற்றுமாம்.
இனி மையால் அமுதத்தைப் பொழிந்ததா லொக்கு மென்க. (6)

அங்கட் கடலி னெடுங்கூம் பகநிமிர்ந்த
வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத்
திங்கட் குடைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும்
வெங்கட் களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்.

     (பா - ம்.) * அமுதொழுகும்.