I


வெள்ளையானைச் சாபந்தீர்த்த படலம்267



     (இ - ள்.) அம்கண் கடலின் - அழகிய இடமகன்ற கடலின்கண்,
அகம்நெடுங் கூம்பு நிமிர்ந்த - தன்னிடத்து நீண்ட பாய் மரம் உயர்ந்த,
வங்கத் தலை உய்க்கும் மீகான் தனை மான - கப்பலின் தலையிலிருந்து
அதனைச் செலுத்தும் மாலுமியை ஒக்க, திங்கள் குடை நிழற்ற - சந்திரவட்டக்
குடை நிழலைச் செய்ய, தீந்தேம் மதம் கவிழ்க்கும் - மிக இனிய மதத்தினைக்
கொட்டுகின்ற, வெங்கண் களிற்றின் மிசை - வெவ்விய கண்களையுடைய
வெள்ளை யானையின்மேல், பவனி போந் தணைந்தான் - திருவுலாப்
போந்தான் எ - று.

     களிற்றுக்கு நாவாய் உவமையாதலை மதுரைக்காஞ்சியினும், மணி
மேகலையினுங் காண்க. யானைக்கு வங்கமும், குடைக்குக் கூம்பும்,
யானையின் பிடர்மேலிருப்போனுக்கு வங்கத்தின் மேலிடத்திருக்கும் மீகானும்
உவமமாம். மீகான் - இச் சொல் மீயான் எனவும், மீகாமன உனவும்
வழங்குகிறது. தீந்தேம் : ஒரு பொருளிருசொல். வெங்கண் -
அஞ்சாமையுமாம். (7)

அத்தலைவிண் ணாட ரருகணைந்து வெவ்வேறு
தத்த மனக்கிசைந்த கையுறைக டாங்கொடுத்துக்
கைத்தலங்கள் கூப்பினார் கண்டான்* கடவுளரில்
உத்தமனை யர்ச்சித்துப் போந்தமுனி யுத்தமனும்.

     (இ - ள்.) அத்தலை - அவ்விடத்து, விண் நாடர் அருகு அணைந்து
- தேவர்கள் (இந்திரன்) மருங்கில் வந்து, தத்தம் மனக்கு இசைந்த - தங்கள்
தங்கள் மனத்திற்குப் பொருந்திய, வெவ்வேறு கையுறைகள் தாம் கொடுத்து -
வேறு வேறு வகையான கையுறைகளைக் கொடுத்து, கைத்தலங்கள் கூப்பினார்
- கைகளைக் குவித்து வணங்கினார்கள்; கடவுளரில் உத்தமனை -
தேவர்களிற் சிறந்த சிவபெருமானை, அர்ச்சித்துப் போந்த - வழிபட்டு வந்த,
முனி உத்தமனும் - முனிவருட் சிறந்த துருவாசனும், கண்டான் - அதனைக்
கண்டு எ - று.

     மனக்கு : சாரியை தொக்கது. கையுறை - காணிக்கை. (8)

தீங்கரிய வாசிமொழி செப்பித்தன் செங்கரத்தின்
நீங்கரிய தாமரையை நீட்டினான் மற்றதனைத்
தாங்கரிய செல்வத் தருக்காலோர் கையோச்சி
வாங்கிமத யானையின்மேல் வைத்தான் மதியில்லான்.

     (இ - ள்.) தீங்கு அரிய - குற்றமில்லாத, ஆசி மொழி செப்பி -
வாழ்த்து மொழிகளைக் கூறி, தன் செங்கரத்தின் நீங்கு அரிய - தனது
சிவந்த கையினின்று நீங்குதலில்லாத, தாமரையை நீட்டினான் -
தாமரைமலரைக் கொடுத்தான்; அதனை - அம்மலரை, தாங்கு அரிய
செல்வத்தருக்கால் - பொறுத்தற்கரிய செல்வச் செருக்கினால், மதி இல்லான்
- அறிவு இல்லானாகிய இந்திரன், ஓர் கை ஓச்சி வாங்கி - ஒரு கையை நீட்டி
வாங்கி, மதயானையின்மேல் வைத்தான் - மதத்தை யுடைய தன் யானையின்
மேலே வைத்தான் எ - று.


     (பா - ம்.) * கண்டார்.