அருமை
இன்மை குறிப்பது. மற்று : அசை. தாங்கரிய செல்வம் - மிக்க செல்வம். செல்வத்தருக்கு
- செல்வத்தாலாய உவகை மிகுதி; களிப்பு. இருகையானும் பணிந்து வாங்கிச் சென்னிமேற்
சூடற் பாலதனை ஒரு கை நீட்டி வாங்கி யானைமேல் வைத்தான் என்றார். (9)
கீறிக் கிடந்த
மதியனைய கிம்புரிக்கோட்
டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல்
நாறிக் கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற்
சீறிக் கிடந்தநெடுந் தாளாற் சிதைத்தன்றே. |
(இ
- ள்.) கீறிக் கிடந்த மதி அனைய - பிளவுண்டு கிடந்த சந்திரனை ஒத்த,
கிம்புரிக் கோட்டு - பூண் அணிந்த கொம்புகளையுடைய, கடம் ஊறி கவிழ்க்கும் - மதத்தைச்
சுரந்து கொட்டும், மால் யானை - மயக்கத்தையுடைய அவ்வெள்ளையானை, உச்சியின்மேல்
நாறிக்கிடந்த - தன் முடியின்மீது மணம் வீசிக்கிடந்த, நறுமலரை - நறியமலரை, வீழ்த்தி
- கீழே தள்ளி, உரல் சீறிக் கிடந்த - உரலொடு மாறுபட்டுக் கிடந்த, நெடுந் தாளால்
- நீண்ட காலால், சிதைத்தன்று - தேய்த்தது எ - று.
நாறிக்கிடந்த
- தோன்றிக் கிடந்த என்னலுமாம். யானைக்கால் உரல்போலுதலின் கறையடியென்பதும் யானைக்கொருபெயராயிற்று.
சிதைத்தன்று - சிதைத்தது : உடன்பாட்டு முற்று. ஏ : அசை; (10)
கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல்
விண்டா ரழல்சிதற நோக்கினான் வெங்கோபங்
கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம்
உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கின்றான். |
(இ
- ள்.) முனிகண்டான் - அதனைத் துருவாச முனிவன் கண்டான்; காமன் காய்ந்தான்
நுதல் கண்போல் - மன்தமனை யெரித்த சிவனது நெற்றிக்கண்போல, ஆர் அழல் விண்டு
சிதற நோக்கினான் - நிறைந்த நெருப்பு வெளிப்பட்டுச் சிதற நோக்கி, வெங்கோபம்
கொண்டான் - கொடிய சினங்கொண்டான்; அமரர் ஓதுங்கக் கொதித்து - தேவர்கள் அஞ்சி
ஒதுங்கும்படி பொங்கி, ஆலம் உண்டான் என நின்று - நஞ்சினை உண்ட உருத்திரன்போல
நின்று, உருத்தான் உரைக்கின்றான் - மேலும் வெகுண்டு கூறுகின்றான் எ - று.
விண்டு
- வெளிப்பட்டு. நோக்கினான், உருத்தான் என்பன முற்றெச்சங்கள். (11)
புள்ளியதோ லாடை புனைந்தரவப் பூணணிந்த
வெள்ளிய செங்கண் விடையா னடிக்கமலம்
உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய். |
(இ
- ள்.) புள்ளியதோல் ஆடை புனைந்து - புள்ளிகளையுடைய தோலாடையைஉடுத்து,
அரவப்பூண் அணிந்த - பாம்பணிகளை அணிந்த,
|