செங்கண் - சிவந்த
கண்களையுடைய, வெள்ளிய விடையான் - வெண்ணிறம்
பொருந்திய ஏற்றையுடைய இறைவனது, அடிக்கமலம் - திரு வடித்தாமரையை,
உள்ளிய மெய்யன்பு உடையார் - இடையறாது நினைக்கின்ற மெய்யன்புடைய
அடியார்கள், அருவருத்துத் தள்ளிய செல்வத்தருக்கினாய் - உவர்த்து
ஒதுக்கிய செல்வத் தருக்கினையுடையவனே, என் செய்தாய் - நீ என்ன
காரியஞ் செய்தாய் எ - று.
புள்ளிய,
அ : அசை. புள்ளித்தோல். வெள்ளிய செங்கள் : முரன்.
தள்ளிய செல்வம் என வியையும். மெய்யன்புடையார் அருவருத்துத்
தள்ளுதலை,
"கொள்ளேன்
புரந்தரன் மாலயன் வாழ்வு"
"போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்" |
என்னும் மணிவாசகங்களாற்
காண்க. செய்தது சிறிதும் அடாதென்பார் என் செய்தாய் என்றார். (12)
கதித்தார் முடியமரர் கையுறையே நன்கு
மதித்தாயெம் மீசன் மதிமுடிமேற் சாத்தும்
பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி
மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய். |
(இ
- ள்.) பேதாய் - அறிவில்லாதவனே, கதிர் தார் முடி அமரர் -
ஒளி பொருந்திய மாலையை யணிந்த முடியினையுடைய தேவர்களின்,
கையுறையே நன்கு மதித்தாய் - கையுறைப் பொருளையே நன்கு மதித்தாய்;
ஈசன் மதி முடிமேல் சாத்தும் - எம் சிவபெருமானின் பிறையினையணிந்த
திருமுடிமேற் சாத்தப்பட்ட, பொதிதாது அவிழ மலரை - நிறைந்த
மகரந்தத்தோடு மலர்ந்த மலரை, போற்றாது - பேணாது, வாங்கி - ஒரு
கரத்தால் வாங்கி, ஆனை மிதித்து சிந்த - யானை யானது மிதித்துச்
சிதைக்குமாறு, அதன்மேல் வைத்தாய் - அந்த யானையின்மேல் வைத்தனை
எ - று.
நன்கு
மதித்தல் - பெரிது மதித்தல் : ஒருசொல். இகழற் பாலதனை
மதித்தும் மதிக்கற் பாலதனை யிகழ்ந்தும் போந்தாய் நின் அறிவிருந்தவா
றென்னே என்றவாறு. எம்மீசன் என்றது எம்மை யெல்லாம் ஆளாகவுடைய
தலைவன் என்றபடி. போற்றாது - குறிக்கொண்டு வழிபடுதலின்றி. (13)
வண்டுளருந் தண்டுழாய் மாயோ னிறுமாப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால். |
(இ
- ள்.) வண்டு உளரும் - வண்டுகள் கிண்டுகின்ற, தண்துழாய்
மாயோன் இறுமாப்பும் - குளிர்ந்த துழாய்மாலையையுடைய திருமாலின்
களிப்பும், புண்டரிகப் போது உறையும் புத்தேள் இறுமாப்பும் - தாமரை
மலரில் இருக்கும் பிரமனது களிப்பும், அண்டர் தொழவாழ் உன்
இறுமாப்பும் - தேவர்கள் பணிய வாழுகின்ற உனது களிப்பும், ஆலாலம்
உண்வனைப்
|