I


270திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பூசித்த பேறு என்று உணர்ந்திலை - நஞ்சினை உண்டருளிய இறைவனை
வழிபட்டதனாலாகிய பயன் என்று நீ அறியாது போயினாய் எ - று.

     உளர்தல் - கிண்டுதல். இறுமாப்பு - மிக்க களிப்பு;
திருவங்கமாலையுள்.

"இறுமாந் திருப்பன் கொலோ"

என வருதல் காண்க. ஆலால முண்டவன் என்றது,

"விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்யும்"

இறைவனுடைய அளவிலாற்றலையும் பேரருளையும் குறிப்பிடற் கென்க,
தேவர்கள் சிவபெருமானை வழிபட்டு வாழ்வதனை,

"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பாற்
றாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டி"

என்னும் திருவாசகத்தா னறிக. (14)

சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு* வெண்ணிறத்த குஞ்சரமுங்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம்.

     (இ - ள்.) சேடு ஆனை வானவ - பெரிய வெள்ளை யானையை
யுடைய இந்திரனே, நின் சென்னி - உனது முடியானது, செழியரில் -
பாண்டியருள், ஓர் வாள் தானை வீரன் வளையால் சிதறுக - ஒரு வாளினை
யுடைய சேனையையுடைய வீரனது திகிரியினால் சிதறக்கடவது; நின் - உனது,
கோள் தானம் நால்கோடு - வலிமையையும் மதத்தையும் நான்கு
கொம்புகளையும் உடைய, வெள் நிறத்த குஞ்சரமும் - வெண்மையான
நிறத்தினையுடைய யானையும், காட்டு ஆனை ஆக - காட்டானையாகக்
கடவது; என - என்று, கடுஞ் சாபம் இட்டான் - கொடிய சாபத்தைக்
கொடுத்தான் எ - று.

     சேடு - பெருமை, யானை ஆனையென மருவிற்று. வட்டமாயிருத்
தலின், திகிரி வளையெனப்பட்டது. வீரன் - உக்கிரகுமார பாண்டியன்; ஓர்
வீரன் என்க. கோட்ட என்று குறிப்புப் பெயரெச்சமாகப் பாட
மோதுவாருமுளர். உம்மை இறந்தது தழீஇயிற்று. (15)

சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை
குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய
அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ்
செவித்தறுகண் வேழமுந் தீங்குடைய ரன்றோ.

     (இ - ள்.) அமரர் - தேவர்கள், சவித்தமுனி பாதம் தலைக்கொண்டு
- சாபமிட்ட துருவாச முனிவனுடைய திருவடிகளை முடியிற் சூடி, செங்கை


     (பா - ம்.) * நாற்கோட்ட.