குவித்து - சிவந்த
கைகளைக் கூப்பி, தம் கோன் குறை இரப்பார் - தம்
தலைவன் பொருட்டுக் குறையிரந்து வேண்டிக் கொள்வாராகி, ஐய - ஐயனே,
அவித்த பொறியாய் - ஐம்பொறிகளைக் கெடுத்தவனே, எம் அரசும் - எம்
அரசனும், கால் தள்ளும் செவி - காற்றை வீசும் காதுகளையும், தறு கண் -
அஞ்சாமையையுமுடைய, வேழமும் - வெள்ளையானையும், தீங்கு உடையர்
அன்றோ - குற்ற முடையவர்கள் அல்லவா எ - று.
சவித்த,
சபித்தவென்பது திரிந்து நின்றது. தங்கோனுககென்க.
குறையிரத்தல் : ஒருசொல். இரப்பார் : எச்சம்; பெயருமாம். அவித்தல் -
அடக்குதல். பொறி அவித்தாய் என விகுதி பிரிந்து சென்றியையும்.
பொறிகளை யவித்தவனென முனிவன்பால் தீங்கின்மை கூறிற்று.
வெகுண்டாரது பொறுதி வேண்டுவார் தம் கற்றத்தை யுடன்படல்
வேண்டுமாகலின் தீங்குடைய ரன்றோ என்றார். திணை விரவிச் சிறப்பால்
உயர்திணை முடிபேற்றன. (16)
அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேண்மற்
றித்தகைய சாப மினிவிடுமி னென்றிரந்து
கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள்
வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான். |
(இ
- ள்.) அத்தகைய நீரால் சபித்தீர் - அங்ஙனமாய குற்றத்தால்
சாபமிட்டீர், அடிகேள் - அடிகளே, மற்று - யாங்கள் வேண்டியக்
கோடலினால், இத்தகைய சாபம் - இந்தச் சாபத்தை, இனிவிடுமின் என்று
இரந்து - இப்பொழுதே நீக்கியருள வேண்டுமென்று குறையிரந்து,
கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க்கு - கைகளைக் குவித்து முறையிட்ட
தேவர்களின் பொருட்டு, இரங்கி அருள் வைத்த முன - மனம் இரங்கிக்
கருணை கூர்ந்த முனிவன், பிறிது சாபம் வகுக்கின்றான் - வேறு
சாபமிடுகின்றான் எ - று
. நீர்
- தடனமை; ஈண்டுக் குற்றமாந்தன்மை. மற்று : வினைமுற்று;
உயர்த்துக் கூறுதற்குட்ச சபித்தீர் அடிகேள் விடுமின் எனப் பன்மையாற்
கூறினார். கரைதல் - சொல்லுதல்; முறையிடுதல். பிறிதாகிய சாபமென்க. (17)
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
சிந்தனை
வாக்கிற் கெட்டாச் சிவனரு ளளித்த சேட
நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் மாக
வந்தது முடிமட் டாக மத்தைா வனமா வாகி
ஐந்திரு பஃதாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக. |
(இ
- ள்.) சிந்தனை வாக்கிற்கு எட்டாச் சிவன் - மனத்திற்கும
வாக்கிற்கும் எட்டாத சிவபெருமான், அருள் அளித்த சேட நிந்தனை -
திருவருளா லருளிய சேடத்தை நிந்தித்த குற்றம், பரிகாரத்தால் நீங்காது -
கழுவாயினால் அகலாது (ஆதலால்), தலைமட்டாக வந்தது - தலை யளவாக
வந்தது, முடிமட்டு ஆக - முடியளவாகக் கடவது; மத்தம்மா -
மதமயக்கத்தையுடைய வெள்ளையானை, வனம்மா ஆகி - காட்டானை யாகி,
|