ஐந்து இருபஃது
ஆண்டு எல்லை - நூற்றாண்டுவரை, அகன்றபின் -
கழிந்த பின், பண்டைத்து ஆக - முன்னியல்பினை உடையதாகுக எ - று.
சிந்தனைக்கும்
வாக்கிற்கும் என விரிக்க. சிவனது திருவருள் என
விதித்தலுமாம். சேடம் - பிரசாதம்; சேடங்கொண்டு சிலர்நின் றேத்த எனச்
சிலப்பதிகாரத்து வருதலுங் காண்க. பரிகாரம்
- பிராயச்சித்தம். வந்தது -
வந்ததாகிய அபாயம் : வினைப்பெயர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு
என்னும் உலக வசனமும் இங்கே நினைக்கற்பாலது. மத்தம் - உன் மத்தம்;
மத்தகமுமாம். ஆக மூன்றனுள் முன்னது வினையெச்சம்; பின்னையவை
வியங்கோள் முற்றுக்கள். (18)
என்றனன் பிறிது சாப மிந்திரன் மகுட பங்கம்
ஒன்றிய செய்கை பின்ன ருரைத்துமற் றஃது நிற்க
நின்றவெள் ளானை வான நீத்தறி விழந்து நீலக்
குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீஇய தன்றே. |
(இ
- ள்) என்றனன் - என்று கூறினன்; பிறிது சாபம் - அவ்வேறு
சாபத்தினால், இந்திரன் மகுடபங்கம் ஒன்றிய செய்கை - இந்திரன் மகுட
பங்கமுற்ற செய்தியை, பின்னர் உரைத்தும் - பின்பு கூறுவேம் (ஆகலின்);
அஃது நிற்க - அது நிற்க, நின்ற வெள்ளானை - சாபம் பெற்று நின்ற
வெள்ளானையானது, வானம் நீத்து - தேவ உலகினை அகன்று, அறிவு
இழந்து - அறிவு கெட்டு, நீலக்குன்று என - நீல மலை போலக் (கருநிற
முடையதாகிய), வனத்து வேழக் குழாத்தொடு குழீ இயது - காட்டானைக்
கூட்டத்தோடு கலந்தது எ - று.
பிறிது
சாபம் என்பதனை என்றனன் என்பதனோடு கூட்டின் கூறியது
கூறலாகும். மகுட பங்கம் - முடி சிதறுதலாகிய பரிபவம். அஃது - அது :
விரித்தல் விகாரம். குழீஇயது, சேர்ந்தது என்னும் பொருட்டு. அன்று, ஏ :
அசைகள்; அப்பொழுதே யெனினுமாம். (19)
மாவொடு மயங்கிச் செங்கண் மறம்பயில் காடு முல்லைப்
பூவொடு வழங்கு நீத்தப் புறவமுங் குறவர் தங்கள்
தேவொடு பயிலுங் கல்லுந் திரிந்துநூ றியாண்டுஞ் செல்லக்
காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கன்றே. |
(இ
- ள்.) மாவொடு மயங்கி - (இவ்வாறு) காட்டானைகளோடு கலந்து,
செங்கண் மறம்பயில் காடும் - சிவந்த கண்களையுடைய மறவர்கள் தங்கிய
பாலை நிலத்திலும், முல்லைப் பூவொடு வழங்கு நீத்தப் புறவமும் - முல்லைப்
பூக்களோடு செல்லா நின்ற காட்டாறுகளை யுடைய முல்லை நிலத்திலும்,
குறவர் தங்கள் தேவொடு பயிலும் கல்லும் - குறவர்கள் தங்கள் கடவுளாகிய
முருகவேளோடு பொருந்தி யிருக்கும் குறிஞ்சி நிலத்திலும், திரிந்து நூறு
ஆண்டும் செல்ல - திரிந்து நூறு ஆண்டுகளும் கழிய, காவொடு பயிலும்
தெய்வக்கடம் பமா வனம் புக்கன்று - சோலைகளாற் சூழப்பெற்ற தெய்வத்
தன்மை பொருந்திய பெரிய கடம்பவனத்திற் புகுந்தது எ - று.
|