மறம் என்னும் பண்புப்
பெயர் அதனையுடையார்க்கு ஆகுபெயர்; மறக்குடி
எனினுமாம். பூவொடு நீத்தத்தையுடைய வென்க; பூவொடு வழங்குகின்ற
எனலுமாம். முருகன்குறிஞ்சித் தெய்வமாகலின் ஆண்டு வாழும் குறவர்க்குத்
தெய்வ மென்றார். கல் - மலை. பாலை, முல்லை, குறிஞ்சி என்னும் மூன்றும்
காடெனப்படுமாகலின் அவற்றில் திரிந்தென்றார். புக்கன்று - புக்கது. ஏ :
அசை. (20)
புக்குரல்
வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீர்ந்த
மைக்கருங் களிறு முக்கண் மாதவ னருள்வந் தெய்தத்
தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு
நக்கபொன் முளரி பூத்த நளிர்பயந் தலைக்கண் டன்றே.* |
(இ
- ள்) புக்க - புகுந்த, உரல்வட்டம் - உரல்போலும் வட்டமாகிய,
திண்கால் - வலிய கால்களையுடைய, பொருவு இல் - ஒப்பில்லாத, தே
இயலில் தீர்ந்த - தெய்வத் தன்மையினின்று நீங்கிய, மைக் கருங் களிறு -
மைபோலுங் கரிய யானையானது, முக்கண் மாதவன் - மூன்று
கண்களையுடைய பெரிய தவத்தினையுடைய சிவபெருமானது, அருள் வந்து
எய்தத் தக்கது ஓர் அமையம் சார - திருவருள் வந்து கூடப் பெறுவதாகிய
ஓர் காலம் பொருந்த, மரகதம் தழைத்து - மரகதம் போலுந் தழைத்து,
மின்னு நக்க - மின்போலும் ஒளி விளங்க, பொன்முளரி பூத்த் -
பொற்றாமரைகள் மலர்ந்த, நளிர் கயம் தலைக்கண்டன்று - குளிர்ந்த
தடாகத்தைக் கண்டது எ - று.
புக்க
என்பதன் அகரந் தொக்கது; புக்கு என வினை யெச்சமுமாம்.
தெய்வத்தன்மையி னீங்கியபின் கருமை யெய்திய களிறு. சிவபிரான் பெரிய
தவத்தினையுடையானென்பது.
"தாழ்சடைப்
பொலிந்த வருந்தவத் தோற்கே" |
என்னும் புறநானூற்றுக்
கடவுள் வாழத்தானு மறியப்படும். மரகதம் போலும்
இலை தழைத்து மலர் பூத்த எனத் தாமரையாகிய முதன்மே லேற்றியுரைக்க.
நக என்பது நக்கவென விரிந்தது. தலைக்கண்டன்று : ஒரு சொல்;
அவ்விடத்துக் கண்டது எனலுமாம். கயந்தலை கண்டன்று என இயல்பாயின்
கயந்தலை என்பதற்குக் கயத்தை யென்றுரைக்க. ஏ : அசை. (21)
கண்டபோ தறிவு தோன்றக்
கயந்தலைக் குடைந்த+போது
பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுட ரருட்கண் டோன்றக்
கொண்டதோர் பரமா னந்தக் குறியெதிர் தோன்றக் கும்பிட்
டண்டர்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற. |
(இ
- ள்.) கண்டபோது - (அவ்வாறு) கண்டபோது, அறிவு தோன்ற -
முன் அறிவு உண்டாகவும், கயந்தலைக் குடைந்தபோது - வாவியில்
நீராடியவுடன், பண்டையவடிவுதோன்ற - முன்னையவடிவந் தோன்றவும்,
பரஞ்சுடர் அருட் கண் தோன்ற - பின் பரஞ்சோதியின் அருட்பார்வை
தோன்றுதலால், பரம ஆனந்தம் கொண்டது ஓர் குறி - மேலான
(பா
- ம்.) * தலைகண் டன்றே. +கயந்தலை குடைந்த.
|