I


274திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஆனந்தமே வடிவமாகக் கொண்டதாகிய ஒப்பற்ற சிவலிங்கமானது, எதிர்
தோன்ற - எதிரே தோன்றாநிற்க, கும்பிட்டு - வணங்கி, அண்டர் நாயகனைப்
பூசை செய்வதற்கு அன்பு தோன்ற - தேவர்கட்கு நாயகனாகிய அச்
சொக்கலிங்கப் பெருமானைப் பூசிப்பதற்கு அன்பு உண்டாக எ - று.

     காட்சி அறிவுக்கும், அறிவு குடைதற்கும், குடைதல் வடிவந்
தோன்றலுக்கும், அருட்கண் தோன்றல் குறியெதிர் தோன்றுதலுக்கும்
காரணங்களாம். அச்சிவலிங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற நாயகனை
எனலுமாம். அன்பு தன் மனத்திற் றோன்ற வென்க. (22)

தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தூநீ ராட்டித்
தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப்
பாம்புடைத் தாய வேணிப் பரனையர்ச் சக்க வுள்ளத்
தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்.

     (இ - ள்.) தூம்பு உடை கையில் மொண்டு - தொளையையுடைய
துதிக்கையினால் முகந்து, மஞ்சனத் தூநீர் ஆட்டி - திருமஞ்சனமாகிய
தூயநீரால் ஆட்டி, தேம்புடை ஒழுக - தேன் புறத்தில் ஒழுக, பள்ளித்
தாமமும் தெரிந்து சாத்தி - திருப்பள்ளித் தாமத்தையும் ஆராய்ந்து சாத்தி,
பாம்பு உடைத்து ஆய வேணிப் பரனை - பாம்பினை அணியாக
உடையதாகிய சடையினையுடைய இறைவனை, அர்ச்சிக்க - வழிபட,
உள்ளத்து ஆம்புடை அறிந்த - உள்ளத்தின்கண் எழுந்த (அன்பின்)
திரட்சியை உணர்ந்த, எந்தை - எம் தந்தையாகிய சோம சுந்தரக் கடவுள்,
ஆனையை நோக்கிக் கூறும் - யானையைப் பார்த்து அருளிச் செய்வான்
எ - று.

     மொண்டு : முகந்து என்பதன் மரூஉ. தேன் தேமெனத் திரிந்தது.
தெரிந்து - குற்றமற ஆராய்ந்து. புடை - பக்கம்; பக்கம் - அன்பு; எனக்
கொள்ளலுமாம். (23)

வந்ததை யெவனீ வேண்டும் வரமெவ னுரைத்தி யென்னச்
சிந்தையி லன்பு கூர்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து
முந்தையில் வினையும் வந்த முறைமையு முறையாற் கூறி
எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ.

     (இ - ள்.) நீ வந்தது எவன் - நி வந்த காரணம் என்னை, வேண்டும்
வரம் எவன் - நீ விரும்புகின்ற வரம் யாது, உரைத்தி என்ன - கூறுவா
யென்ன, சிந்தையில் அன்பு கூர்ந்த - உள்ளத்தில் அன்பு மிகுந்த, தெய்வத
வேழம் - தெய்வத் தன்மை பொருந்திய வெள்ளை யானை, தாழ்ந்து -
வணங்கி, முந்தையில் விளையும் - முற்பொழுதில்நிகழ்ந்ததனையும், வந்த
முறைமையும் - வந்த தன்மையையும், முறையால் கூறி - முறைப்படச்
சொல்லி, எந்தையை அடையப் பெற்றேற்று - எம் தந்தையாகிய நின்னை
அடையப்பெற்ற எனக்கு, இனி ஒரு குறை உண்டாமோ - மேல் ஒரு குறை
உண்டாகுமோ (ஆகாது) எ - று.

     வந்தது - வந்து காரணம்; ஐ : சாரியை; திரி சொல்லுமாம். எவன்.
வினாப்பெயர். முந்தையில் : காலம் இடமாயிற்று. ஓகாரம் : எதிர்மறை. (24)