என்பதா மாரம்* பூண்ட வெந்தையிக் கரிக ளெட்டோ
டொன்பதா யடிய னேனு முன்னடி பிரியா துன்றன்
முன்பதா யிவ்வி மான முதுகுறச் சுமப்ப லென்றோர்
அன்பதா யொன்றென் னுள்ளத்தடுத்தலா லஃதே வேண்டும். |
(இ
- ள்.) என்பு ஆம் ஆரம் பூண்ட எந்தை - என்பாகிய அணியைப்
பூண்ட என் தந்தையே, இக்கரிகள் எட்டோடு - (விமானத்தைத் தாங்கும்)
இவ் யானைகள் எட்டினோடு, அடியனேனும் ஒன்பது ஆய் - அடியேனும்
ஒன்பதாவது யானையாகி, உன் அடி பிரியாது - உனது திருவடியை நீங்காது,
உன்றன் முன்பு ஆய் - நினது திருமுன்பாகி, இவ் விமானம் - இந்த
விமானத்தை, முதுகு உற - முதுகிற் பொருந்த, சுமப்பல் என்று - சுமப்பன்
என்று, ஓர் அன்பு ஒன்று ஆய் - ஒப்பற்ற அன்பொன்றுண்டாகி, என்
உள்ளத்து அடுத்தலால் - எனது நெஞ்சின் கண் பொருந்துதலால், அஃதே
வேண்டும் - அங்ஙனம் சுமத்தலாகிய ஒன்றுமே எனக்கு வேண்டும்; (என்று)
எ - று.
என்பது
முன்பது அன்பது என்பவற்றில் அது : பகுதிப் பொருள்
விகுதிகள். என்பரா வாரம் பூண்ட என்பது பாடமாயின் என்பையும்
பாம்பையும் ஆரமாகப் பூண்ட வென்க. ஒன்பதாய் - ஒன்பதாவதாய். என்
உள்ளத்து அன்பு ஒன்று ஆய் அடுத்தலால் என இயைக்க. அன்பு -
விருப்பம். என்று என ஒரு சொல் வருவிக்க. (25)
இடையறா வன்பின் வேழ மிங்ஙனங் கூற விண்ணா
டுடையவ னம்பான் மெய்யன் புடையவ னவனைத் தாங்கி
அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும்
விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே. |
(இ
- ள்.) இடையறா அன்பின் வேழம் - நீங்காத அன்பினை யுடைய
அவ்வியானையானது, இங்ஙனம் கூற - இவ்வாறு வேண்ட, விண் நாடு
உடையவன் - தேவ உலகத்தை உடையவனாகிய இந்திரன், நம்பால் மெய்
அன்பு உடையவன் - நம்மிடம் உண்மையன்புடையவன் (ஆதலால்),
அவனைத் தாங்கி அடைவதே - அவனைச் சுமந்து செல்வதே, நமக்கு
வேண்டும் அகம் மகிழ்வு என்னா - நமக்கு வேண்டிய உள்ளக் களிப்பு
என்றுகூறி, விடையவன் பின்னும் வரங்கள் நல்கி - இடபவாகனத்தையுடைய
இறைவன் பின்னரும் வேண்டியவரங்களைக்கொடுத்து, விடை
கொடுத்தருளினான் - விடை கொடுத்தனுப்பினான் எ - று.
அன்பினாற்
கூற என இயைத்தலுமாம். நாம் விரும்பும் அகமகிழ்ச்சிக்
குரியதென்க. (26)
[எழுசீரடியாசிரிய
விருத்தம்]
|
விடைகொடு
வணங்கி யேகும்வெள் ளானை
மேற்றிசை யடைந்துதன் பெயரால்
தடமுமற் றதன்பா லரனையுங் கணேசன்
றன்னையுங் கண்டருச் சனைசெய் |
|