I


276திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



திடையறா வன்புந் தானுமங் கிருக்கு
     மெல்லையிச் செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
     களிற்றினைக் கொணர்கென விடுத்தான்.

     (இ - ள்.) விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளானை - விடை பெற்று
வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேல் திசை அடைந்து -
மேற்குத் திக்கினை யடைந்து, தன் பெயரால் - தனது பெயரால், தடமும் -
ஓர் பொய்கையினையும், அதன் பால் அரனையும் கணேசன் தன்னையும்
கண்டு - அப்பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும்
பிரதிட்டை செய்து, அருச்சனை செய்து - அருச்சித்து, இடையறா அன்பும்
தானும் அங்கு இருக்கும் எல்லை - நீங்காத அன்புந் தானுமாக அங்கிருக்கும்
பொழுதில், இச்செய்தி கேட்டு - இச் செய்தியைக் கேள்வியுற்று, அருள்கூர்
கடவுளர் பெருமான் - கருணைமிக்க தேவேந்திரன், உழையரை விளித்து -
ஏவலாளரை அழைத்து, எம் களிற்றினைக் கொணர்க என விடுத்தான் -
எமது யானையைக் கொண்டு வாருமென அனுப்பினான் எ - று.

     தடத்தையும் என உருபு விரிக்க. அன்பு ஓர் வடிவு கொண்டாற் போல
வென்பார் ‘அன்புந்தானும்’ என்றார்; இங்ஙனம் விசேடணம் விசேடியத்துடன்
சேர்த்தெண்ணப் படுதலை,

"சிந்தையிடை யறாவன்பந் திருமேனி தனிலசைவும்
கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும்
வந்திழிகண் ணீர்மழையும் வடிவிற்பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிர் வந்தணைய"

என்னும் திருத்தொண்டர்புராணச் செய்யுளானுமறிக. கொணர்கென :
அகரம் தொகுத்தல். (27)

வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
     வருவலென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண்*
     டிந்திரேச் சுரனென+விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
     தூயபூ சனைசெய்தங் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங்
     களிறுவந் திலதெனப் பின்னும்.

     (இ - ள்.) வல்லை வந்து அழைத்தார் தம்மை - விரைந்து வந்து
அழைத்தவர்களை, வருவல் என்று - வருவேன் என்று கூறி, முன் போக்கி
- முன்னே போகச் செய்து, எழுந்து கீழ்த்திசை ஓர் எல்லை வந்து -
அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓர் இடத்தை எய்தி, ஓர் ஊர்