தன் பெயரால் அமைத்து,
இறைவன் தொல்லை வண்பெயரால் - தன்
தலைவனது பழமையான அழகிய பெயரால், இந்திரேச்சுரன் என ஒன்று
கண்டு - இந்திரேச்சுரன் என்று ஓர் சிவலிங்க மமைத்து, அரனைத் தூய
பூசனைசெய்து அங்கு இருப்ப - அவ்விறைவனைத் தூய்மையான பூசனை
செய்து கொண்டு அங்கேயே இருக்க, கல்லைவன் சிறகு தடிந்தவன் -
மலைகளைச் சிறகின் கண் வெட்டியவனாகிய இந்திரன், இன்னும் களிறு
வந்திலது எனப் பின்னும் - இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்
எ - று.
வருவலென்று
முன்போக்கி என மாற்றுக. மலையின் சிறகைத்
தடிந்தவன் என்பது கருத்து; சிறகு தடிந்தவன் என்பதனை ஒரு சொல் லாக்கி
இரண்டனுருபிற்கு முடிபாக்கலுமாம். (28)
மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப
வானடைந் திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்
புன்கணோ யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு
களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ
மினிதுவீற் றிருந்தது மாதோ. |
(இ
- ள்.) மனத்தினும் கடிய தூதரை விடுப்ப - மனத்தினைவிட
விரைந்து செலவினையுடைய தூதர்களை அனுப்ப (அவர்களோடும்), வான்
அடைந்து இறைவனை வணங்கி - விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி,
புனத்தினும் கடிய கல்லினும் - காட்டிலும் வலிய மலைகளிலும், பல்நாள் -
பலநாடகள் வரை, புன்கண் நோய் உறவரு சாபம் - துன்ப நோயானது மிக
வந்த சாபத்தினை (நுகர்ந்ததும்), கனத்தினும் கரிய கண்டனை - முகிலினுங்
கரிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை, கண்டு - தரிசித்து,
களைந்ததும் - (அச்சாபத்தைப்) போக்கியதும், கிளந்து - கூறி, திக்கயத்தின்
இனத்தினும் - எண்டிசை யானைகளாகிய இனத்தினும், கழிந்த தெய்வத
வேழம் - மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையானது,
இனிது வீற்றிருந்தது - இனிதாக வீற்றிருந்தது எ - று.
தூதர்
வந்து அழைக்க அவர்களோடும் என்பதனைச் சுருங்கச்
சொல்லல் என்னும் அழழுபெறத் தொகுத்துக் கூறினார். புன்கணாகிய நோய்
என்க. களைந்ததும் என்னும் எச்சவும்மையால் நுகர்ந்ததும் என்பது
வருவிக்கப்பட்டது. இனி, சாபத்தைக் களைந்ததும் பிறவும் என்னலுமாம்.
இனத்தில் பிறவற்றினுமென்க. கழிந்த - மிக்க. மாது ஓ : அசை. (29)
குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங்
குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக்
கடவுளைப் பணிந்தவர் சாபத்
|
|