I


திருநகரங்கண்ட படலம்279



3. திருநகரங்கண்ட படலம்

[கலிநிலைத்துறை]
தான வாறிழி புகர்முகத் தடுகரி சாபம்
போன வாறுரை செய்துமேற் புதுமதி முடிமேல்
வான வாறினன் கடம்பமா வனமுது நகரம்
ஆன வாறது தனைச்சிறி தறிந்தவா றறைவாம்.

     (இ - ள்.) தான ஆறு இழி - மதமாகிய ஆறு ஒழுகுகின்ற, புகர்
முகத்து அடுகரி - புள்ளிகளையுடைய முகத்தினையுடைய (பகைவர்களைக்)
கொல்லும் வெள்ளையானையுனது, சாபம் போனவாறு உரை செய்தும் - சாபம்
நீங்கிய தன்மையைக் கூறினோம்; மேல் - இனி, புது மதி முடிமேல் - பிறை
மதியை அணிந்த திருமுடியின்கண், வான ஆறினன் - கங்கையாற்றினை
யுடைய இறைவனது, கடம்ப மா வனம் - பெரிய கடம்பவன மானது, முது
நகரம் ஆனவா றதுதனை - மிக்க சிறப்பினையுடைய நகரமான தன்மையை,
அறிந்தவாறு சிறிது அறைவாம் - தெரிந்தபடி சிறிது கூறுவாம் எ - று.

     உரைசெய்தும் - உரைத்தாம். பிறை புதுவதாகத் தோன்றுதலின்
அதனைப் புதுமதி யென்றார். ஆற்றினன் எனற்பாலது தொக்கது. முதுமை -
சிறப்பு மிகுதியை யுணர்த்தும். அது : பகுதிப் பொருள் விகுதி. (1)

இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர்.

     (இ - ள்.) இன் நரம்பு உளர் - இனிய நரம்புகளைத் தடவுதலி
னுண்டாகின்ற, ஏழ் இசை - ஏழசைபோலும், டிமடற்று ஏழால் அளிகள்
- கண்டத்தினின்று முண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம்
பயில் - இசைபாடுகின்ற, மா கடம்ப வனத்தினின் கீழ்சார் - பெரிய
கடம்பவனத்தின் கீழ்ப்பக்கத்தில், உலக மன்னர் சேகரன் - உலகின்கண்
உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், தென்னர் சேகரன் - பாண்டிய
மரபிற்கு மகுடம் என்று சொல்லப்படுபவனுமாகிய, குலசேகரன் அரசுசெய்து
இருப்பது மணவூர் - குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்திருப்பதற்
கிடமாயுள்ளது மணவூராகும் எ - று.

     எழால் - மிடற்றெழு மொலி; யாழெனக்கொண்டு, எழால் நரம்புளர்
என இயைத்தரு மொன்று. கின்னரம் - யாழும், இசைபாடும் ஓர் பறவையும்;

"யாழின் பெயருநீர்ப் பறவையுங் கின்னரம்"

என்பது பிங்கலம்; இசைக்கு ஆகுபெயர். இன்னுருபிற்கு இன் சாரியை
சிறுபான்மை வருமெனக் கொள்க. இது மணலூர் எனப் பழைய
திருவிளையாடலிலும், மணலூர் புரம் என வடமொழி வியாச பாரதத்தும்
கூறப்பட்டுளது. (2)