I


28திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத்தொடு முடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே"

என்று சேந்தனாரும் அருளிச்செய்திருத்தல் காண்க. (22)

              நூல்செய்தற்குக் காரணம்

                     [வேறு]

அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சநற்கு மாரன்
உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனுக் குணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா
றெண்ணிய விவற்றுட் காந்தத் தீசசங் கிதையின் மாதோ.

     (இ - ள்.) அண்ணல்பால் - பெருமை பொருந்திய சிவபிரானிடத்து,
தெளிந்த - கேட்டுத் தெளிந்த, நந்தி அடிகள்பால் - நந்தி தேவரிடம்,
சநற்குமாரன் - சநற்குமார முனிவன், உள் நிறை அன்பின் - உள்ளத்தில்
நிறைந்த அன்பினோடு. ஆய்ந்து - கேட்டு ஆராய்ந்து, வியாதனுக்கு
உணர்த்த - வியாசமுனிவனுக்கு அறிவிக்க, அந்தப்புண்ணிய முனிவன் -
அந்தப் புண்ணியங்களையுடைய வியாசமுனிவன், சூதற்கு - சூதமுனிவனுக்கு,
ஓதிய - சொன்ன, புராணம் மூவாறு - புராணங்கள் பதினெட்டாகும்;
எண்ணிய இவற்றுள் - மதிக்கப் பெற்ற இப்பதினெண் புராணங்களுள்,
காந்தத்து - காந்தமகாபுராணத்தில், ஈசசங்கிதையின் - சங்கரசங்கிதையில்
எ - று.

     நந்தியடிகள், சிலாதரமுனிவன் புதல்ர்; கோடியாண்டு அருந்தவம்
புரிந்து சிவபெருமானுக்கு ஊர்தியும், வாயில் காப்போரு மாயினவர்;
சைவசந்தான முதற் குரவர்; சனற்குமாரன், வியாதன், சூதன் என்போர்
வரலாறுகளும், பதினெண்புராணங்களின் பெயர் முதலியவும் பின்
புராணவரலாறு கூறுமிடத்தே விளக்கப்படும். மாது, ஓ : அசைகள். (23)

அறைந்திடப் பட்ட தாகு மாலவாய்ப் புகழ்மை யந்தச்
சிறந்திடும் வடநூ றன்னைத் தென்சொலாற் செய்தி யென்றிங்
குறைந்திடும் பெரியோர் கூறக் கடைப்பிடித் துறுதி யிந்தப்
பிறந்திடும் பிறப்பி லெய்தப் பெறுதுமென் றுள்ளந் தேறா.

     (இ - ள்.) ஆலவாய்ப்புகழ்மை - திருவாலவாயென்னும் மதுரையின்
பெருமை, அறைந்திடப்பட்டது ஆகும் - கூறப்பெற்றது ஆகும்; அந்தச்
சிறந்திடும் வடநூல் தன்னை - அந்தச் சிறந்த வடநூலுட் கூறப்பட்ட
பெருமைகளை, தென்சொலால் செய்தி என்று - தமிழ்மொழியால்
கூறுவாயென்று, இங்கு உறைந்திடும் - இவ்விடத்து (மதுரையில்) வசிக்கும்,
பெரியோர் கூற - பெரியோர்கள் பணிக்க, பிறந்திடும் இந்தப் பிறப்பில் -
பிறந்த இப்பிறவியிலேயே, உறுதி எய்தப் பெறுதும் என்று - பிறப்பின்பயனை