I


280திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



குலவு மப்பெரும் பதியிளங் கோக்களி லொருவன்
நிலவு மாநிதி போலருச் சனைமுத னியதி
பலவு மாஞ்சிவ தருமமுந் தேடுவான் பரன்பாற்
றலைமை சான்றமெய் யன்பினான் றனஞ்சய னென்பான்.

     (இ - ள்.) குலவும் - விளங்காநின்ற, அப் பெரும்பதி
இளங்கோக்களில் ஒருவன் - அந்தப் பெரிய நகரத்திலுள்ள வணிகருள்
ஒருவன், நிலவு மா நிதிபோல் - விளங்குகின்ற பெரிய பொருளை யீட்டுவது
போலவே, அருச்சனைமுதல் நியதி பலவும் ஆம் - அருச்சனை முதலிய
கடமைகள் பலவுமாகிய, சிவதருமமும் தேடுவான் - சில புண்ணியங்களையும்
ஈட்டுவான் : பரன்பால் - இறைவனிடத்து, தலைமைசான்ற மெய் அன்பினான்
- தலைமைபொருந்திய உண்மை யன்பை உடையவன்; தனஞ்சயன் என்பான்
- தனஞ்சயன் என்று சொல்லப்படுவான் எ - று.

     இளங்கோக்கள் - வைசியர் பொதுப்பெயர். ஒருவன் : எழுவாய்.
தேடுவான் முதலியன பயனிலைகள்; உளன் என வருவித்து முடித்தலுமாம்.
(3)

செல்வ மாநக ரிருந்துமேற் றிசைப்புலஞ் சென்று
மல்லல் வாணிகஞ் செய்துதன் வளம்பதி மீள்வான்
தொல்லை யேழபவக் கடற்கரை தோற்றுவித் தடியார்
அல்ல றீர்ப்பவன் கடம்பமா வனம்புகு மளவில்.

     (இ - ள்) செல்வம் மாநகர் இருந்து - செல்வம் நிறைந்த பெரிய (தன்)
நகரத்தினின்றும், மேல்திசைப் புலம் சென்று - மேற்றிசை யிடங்களிற் சென்று,
மல்லல் வாணிகம் செய்து - செல்வமிகும் வாணிபம் புரிந்து, தன்வளம் பதி
மீள்வான் - தனது வளப்பமிக்க நகரத்திற்கு மீண்டு வருகின்றவன், தொல்லை
ஏழபவக் கடல்கரை தோற்றுவித்து - தொன்றுதொட்டு வரும் ஏழு பிறப்பாகிய
கடலின் கரையைத் தோன்றச் செய்து, அடியார் அல்லல் தீர்ப்பவன் -
அடியார்களின் பிறவித் துன்பத்தைப் போக்குவோனாகிய சோமசுந்தரக்
கடவுள் எழுந்தருளிய, மா கடம்பவனம் புகும் அளவில் - பெரிய
கடம்பவனத்திற் புகுகின்ற பொழுதில் எ - று.

     மல்லல் வாணிகமாவது, ‘கொள்வதூஉ மிகைகொளாதுகொடுப்ப பதூஉங்
குறைபடாது தமவும் பிறவு மொப்ப நாடிச்’ செய்தலால் ஊதியம் மிகும்
வாணிகமாம். ஏழென்பதனைக் கடற்குங் கூட்டுக. ஏழ பிறப்பும் ஏழ்கடலும்
முன் உரைக்கப்பட்டன. கரையென்றது முத்தியை : ஏகதேச வுருவகம். (4)

இரவி கண்மறைந் தேழபதி யிரதமுந் தானும்
உரவு நீர்க்கருங் கடலில்வீழந் தொளித்தனனாக
இரவு நீண்மயங்* கிருள்வயிற் றமியனாய் மெலியும்
அரவு நீர்ச்சடை யண்ணருக் கன்பினோ னங்கண்.

     ((பா - ம்.) * விரவுநீல் மயங்கு.