(இ
- ள்.) இரவி - சூரியன், கண் மறைந்து - கண்ணுக்குத்
தோன்றாமல், ஏழ பரி இரதமும் தானும் - ஏழு குதிரைகள் பூட்டிய தேரும்
தானும், உரவு நீர்க்கருங்கடலில் - மிக்க நீரினையுடைய கரிய கடலின் கண்,
வீழ்ந்து ஒளித்தனன் ஆக - விழுந்து மறைந்தானாக, இரவு - இரவினது,
நிள் - நீண்ட, மயங்கு - மயங்குதற்குக் காரணமாயுள்ள, இருள் வயின் -
இருளினிடத்து, தமியனாய் மெலியும் - ஒருவனாய் வருந்துகின்ற, அரவு
நீர்ச்சடை அண்ணலுக்கு அன்பினோன் - பாம்பையும் கங்கையையு முடைய
சடையினையுடைய இறைவனுக்கு அன்புடைய வனாகிய வணிகன், அங்கண்
- அவ்விடத்தில் எ - று.
கண்
மறைந்து : ஒரு சொல்லுமாம். இரதமும் தானுமெனத் திணை
விரவிச் சிறப்பினால் ஒளித்தனனென உயர்திணை முடிபேற்றது;
"தானுந் தேரும்
பாகனும் வந்தென் னலனுண்டான்" |
என்புழிப்போல : திணைவழு
வமைதி. விரவுநீல் என்பது பாடமாயின் விரவிய
கருமையையுடைய என்றுரைக்க. மெலியும் அன்பினோன் எனக் கூட்டுக. (5)
வாங்கு நான்மருப் பேந்திய மதமலை யெருத்தந்
தாங்கி யாயிரங் கரங்களாற் றடவியெண் டிசையுந்
தூங்கு காரிரு டுரத்துசெஞ் சுடரெனச் சூழ்போய்
வீங்கு காரிரு ளொதுக்கிய விமானநேர் கண்டான். |
(இ
- ள்.) வாங்கு நால் மருப்பு ஏந்திய - வளைந்த நான்கு கொம்பு
களையுடைய, மதமலை எருத்தம் தாங்கி - எட்டு யானைகளின் பிடர்களால்
தாங்கப்பெற்று, ஆயிரம் கரங்களால் தடவி - ஆயிரங் கிரணங்களாலும்
துருவி, எண் திசையும் தூங்கு - எட்டுத் திக்குகளிலும் தங்கி யிராநின்ற, கார்
இருள் துரத்து செஞ்சுடர் என - பரிய இருளை ஓட்டு கின்ற செஞ்ஞாயிறு
போல, சூழ் போய் - திசைதோறும் சுற்றிலும் சென்று, வீங்கு கார் இருள்
நிறைந்த கரிய இருளை, ஓதுக்கிய - போக்கிய, விமானம் நேர் கண்டான் -
விமானத்தை நேரிற் பார்த்தான் எ - று.
தாங்கி
: செயப்பாட்டு வினை. தாங்கி ஒதுக்கிய விமானம் என
வியையும். கரம் - கிரணம், கை. தூங்கு - செறிந்த வென்னலுமாம். (6)
அடுத்த ணைந்தன னவிர்சுடர் விமானமீ தமர்ந்த
கடுத்த தும்பிய கண்டனைக் கண்டுதாழ்ந்
மடுத்த நெஞ்சினா னங்ஙனம் வைகிருள் கழிப்பான்
எடுத்த சிந்தையி னிருந்தன னிருக்குமவ் விருள்வாய். |
(இ
- ள்.) அடுத்து அணைந்தனன் - பக்கத்தில் நெருங்கி, அவிர்
சுடர் விமானம் மீது அமர்ந்த - விளங்குகின்ற ஒளியினையுடைய
விமானத்தின்மேல் எழுந்தருளிய, கடு ததும்பிய கண்டனைக் கண்டு - நஞ்சக்
கறை மிக்கு விளங்கும் திருமிடற்றினையுடைய இறைவனைத் தரிசித்து,
தாழ்ந்து - வணங்கி, உவகை மடுத்த நெஞ்சினான் - களிப்பு நிறைந்த
உள்ளத்தை யுடையவனாய், வைகு இருள் - தங்கிய இருளை, அங்ஙனம்
|