நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக்
கான நல்விரை வருக்கமு மமரர்கைக் கொடுத்து
ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த்
தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை. |
(இ
- ள்.) மெல் நானம் - மெல்லிய கத்தூரியையும், நறும் பனி புனல்
- மணமுடைய பனிநீரையும், நாயகன் பூசைக்கு ஆன நல் விரை வருக்கமும்
- இறைவன் பூசைக்குரிய நல்ல கந்தவருக்கங்களையும், அமரர் கைக்
கொடுத்து - தேவர்கள் கையில் கொடுத்து, ஞானம் - ஞான வடிவாகிய,
வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கா - வெள்ளிய சந்திரனை யணிந்த
சடையினையுடைய சோமசுந்தரக் கடவுளின் விமானத்தின் திருமுன், தான்
அமர்ந்து - தானிருந்து, தங்கள் நாயகளை அருச்சனை செய்வான் - தங்கள்
இறைவனை அருச்சனை புவிப்பானாயினன் எ - று.
நானம்,
புனல் என்பவற்றில் எண்ணும்மை விரிக்க. பனிநீர் பன்னீர்
என இக் காலத்து வழங்கும். ஞாங்கர் - முன் செய்வித்தலைச் செய்தலாகக்
கூறினார்; இங்ஙனம் வழங்குமாறுங் காண்க. அவன் குடி முழுதையும்
உளப்படுத்தித் தங்கணாயக னென்றார். (10)
றன்னைமெய் யன்பினா லருச்சிசெய் வானோர்
உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக்
கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான்
தள்ள ருஞ்சுடர் விமானமேற் றனித்துறை தனியை. |
(இ
- ள்.) வள்ளல் தன்னை - சோமசுந்தரக் கடவுளை, மெய்
அன்பினால் - உண்மை யன்பினால், அருச்சிசெய் வானோர் (ஈட்டமும்) -
அருச்சித்த தேவர்களின் கூட்டமும், உள்ள வல்வினை ஈட்டமும் - தன்
மனத்தைப் பற்றிய வலிய வினைக் கூட்டமும், கங்குலும் ஒதுங்க - இரவும்
நீங்க, கள்ளம் இல்லவன் - வஞ்சனையில்லாதவனாகிய வணிகன், யாரையும்
கண்டிலன் - ஒருவரையுங் காணாதவனாகி, தள் அரும் சுடர் விமானம்
மேல் -நீங்காத ஒளியையுடைய விமானத்தின்கண், தனித்து உறைதனியைக்
கண்டான் - தனித்து எழுந்தருளியிருக்கும் சொக்க லிங்கப் பெருமானையே
கண்டான் எ - று.
அருச்சி,
முதனிலைத் தொழிற் பெயர். ஈட்டமும் என்பது வானோர்
என்பதனோடுங் கூட்டப்பட்டது; ஓர் என்பதனை அசையாக்கிச் செய்வானது
வினை யீட்டமும் எனலுமாம்; அனாதியேயுள்ள வல்வினை
என்றுரைத்தலுமாம். கண்டிலன் : முற்றெச்சம். (11)
ஆழ்ந்த சிந்தைய னதிசய மடைந்துசே வடிக்கீழ்த்
தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைப் கூப்பிச்
சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து
வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான். |
(இ
- ள்.) ஆழ்ந்த சிந்தையன் - (அன்பில்) அழுந்திய சிந்தையை
யுடைய வணிகன், அதிசயம் அடைந்து - வியப்புற்று, சேவடிக்கீழ்
|