தாழ்ந்தெழுந்து -
சிவந்த திருவடிக்கீழ் விழுந்து வணங்கி எழுந்து,
இருகைகளும் தலைமிசைக் கூப்பி - இரண்டு கைகளையும் தலையின்மேல்
குவித்து, சூழ்ந்து - வலம் வந்து, தன் பதிக்கு ஏகுவான் ஒருதலை துணிந்து
- தன் நகருக்குப் போக ஒருவாறு துணிந்து, வாழ்ந்த அன்பினான் -
அன்பாகிய வாழ்க்கையை யுடையவன், விடை கொடு - விடை பெற்று,
வழிக்கொடு வந்தான் - வழிக்கொண்டு வந்தான் எ - று.
சூழ்ந்து
- ஆலோசித்து என்றுமாம். ஒருதலை துணிந்து என்றது
பிரிந்து செல்லுதலருமையால். வாழ்ந்த அன்பினான் - அவனெனச்
சுட்டாகக் கொள்க; விகுதி பிரிததுக் கூட்டப்பட்டது. (12)
முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
புக்க டங்கலர் சிங்கமன் னானெதிர் புகல்வான்
திக்க டங்கலுங் கடந்தவெந் திகிரியாய் நெருநல்
அக்க டம்பமா வனத்திலோ ரதிசயங் கண்டேன். |
(இ
- ள்.) முக்கடம்படு களிற்றினான் - மூன்று மதங்களையுடைய
யானையையுடைய பாண்டி மன்னனது, முகில் தவழ் கோயில் புக்கு - மேகந்
தவழுங் கோயிலை அடைந்து, அடங்கலர் சிங்கம் அன்னான் எதிர் -
பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம்போல்பவனது எதிரே நின்று, புகல்வான்
- கூறுவான், திக்கு அடங்கலும கடந்த - எல்லாத் திசைகளையும் வென்ற,
வெம் திகிரிவாய் - வெவ்விய சக்கரத்தையுடையவனே, நெருநல் - நேற்று,
அக் கடம்ப மா வனத்தில் ஓர் அதிசயம் கண்டேன் -அந்தப் பெரிய
கடம்பவனத்தின்கண் ஓர் அதிசயத்தைப் பார்த்தேன் எ - று.
திகிரி
- ஆணை; சக்கரப்படையுமாம். சுட்டு மேன்மையை
உணர்த்துவது. (13)
வல்லை வாணிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
கல்ல டைந்தது வெங்கதிர் கங்குலும் பிறப்பும்
எல்லை காணிய கண்டன னிரவிமண் டலம்போல்
அல்ல டுஞ்சுடர் விமானமு மதிற்சிவக் குறியும். |
(இ
- ள்.) நான் வாணிகம் செய்து வல்லை வரு வழி, நான்
வியாபாரம் செய்து விரைந்து வரும் பொழுது, வெங்கதிர் மேலைக்கல்
அடைந்தது - வெப்பத்தையுடைய ஞாயிறு மேற்கிலுள்ள மலையை
அடைந்தது; கங்குலும் பிறப்பும் எல்லை காணிய - இரவின் எல்லையையும்
பிறப்பின் எல்லையையுங் காணுமாறு, இரவி மண்டலம் போல் -
சூரியமண்டலம் போல, அல் அடுவிரி சுடர் விமானமும் - இருளைக்
கொல்லும் ஒளியினையுடைய விமானத்தையும், அதில் சிவக்குறிப்பு
பார்த்தேன் எ - று.
மேலைக்கல்
- அத்தகிரி. காணிய : செய்யிய வென்னும் வினையெச்சம்.
கங்குல் எல்லை காணிய கண்டே னென்றது இரவு முடியுங் காறும் இருந்து
கண்டே னென்றபடி. இனிப் பிறவியில்லை யென்பான் பிறப்பு
|