I


திருநகரங்கண்ட படலம்285



எல்லை காணிய கண்டேன் என்றான். அன் விகுதி தன்மையில் வந்தது.
அடுதல் - ஈண்டு மாய்த்தல். (14)

மாவ லம்புதார் மணிமுகை் கடவுளர் வந்தத்
தேவ தேவனை யிரவெலா மருச்சனை செய்து
போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடை கொடு மீண்டன னென்றான்.

     (இ - ள்.) மா அலம்பு தார் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை
அணிந்த, மணிமுகை் கடவுளர் வந்து - மணிகள் அழுத்திய முடிகளை
யுடைய தேவர்கள் வந்து, அத் தேவ தேவனை - அந்தத் தேவர்களுக்குத்
தேவனாகிய சோமசுந்தரக் கடவுளை, இரவு எலாம் அருச்சனை செய்து
போவது ஆயினார் - இரவு முழுதும் அருச்சித்துப் போனார்கள்; யானும் -
நானும், அ பொன் நெடுங்கோயில் மேவும் ஈசனை - அந்தப் பொன்னாலாகிய
நீண்ட விமானத்தில் எழுந்தருளிய இறைவனிடத்து, விடைகொடு மீண்டனன்
என்றான் - விடை பெற்றுக்கொண்டு வந்தேன் என்று கூறினான் எ - று.

     மா என்னும் பலபொரு ளொருசொல் சார்பினால் வண்டினைக்
குறித்தது. தேவர் மாலையிலும் வண்டு மொய்த்தல் கூறுவார். போவது :
தொழிற் பெயர். ஈசனை : வேற்றுமை மயக்கம். (15)

மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
தாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
நீளு மன்புமற் புதமுமே நிரம்பநீர் ஞாலம்
ஆளு மன்னவ னிருந்தனன் போயினா னருக்கன்.

     (இ - ள்) மூளும் அன்பினான் மொழிந்திட - மேன் மேல் வளரும்
அன்பினையுடைய தனஞ்சயன் கூற, நீர் ஞாலம் ஆளும் மன்னவன் - கடல்
சூழ்ந்த உலகினை ஆளுகின்ற குலசேகர பாண்டியன், முக்கண் எம்பெருமான்
தாளும் - ன்று கண்களையிடைய எம் பெருமானாகிய சோம சுந்தரக்
கடவுளின் திருவடிகளையும், அஞ்சலி கரங்களும் - குவித்த கைகளையும்,
தலையில் வைத்து - சென்னியில் வைத்து, உள்ளம் - உள்ளத்தில், நீளும் -
ஓங்குகின்ற, அன்பும் அற்புதமுமே நிரம்ப - அன்பும் அதிசயமுமே நிறைய,
இருந்தனன் - இருந்தான்; அருக்கன் போயினான் - சூரியன் மறைந்தான்
எ - று.

     தாளினைத் லை வைத்தல் பாவனையால். அஞ்சலித்த கரமென
விதியும் : வினைத்தொகை. பிறிதோ ரெண்ணமுமின்றி யென்பார், அன்பு
மற்புதமுமே நிரம்ப வென்றார். நீர் : கடலுக்கு ஆகுபெயர். (16)

ஈட்டு வார்வினை யொத்தபோ திருண்மலங் கருக
வாட்டு வாரவர் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
சூட்டு வார்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினார் கனவில்.