(இ
- ள்.) ஈட்டுவார் வினை ஒத்தபோது - வினைகளை ஈட்டுகின்ற
வர்களின் வினை ஒப்புவந்தபோது, இருள் மலம் கருக வாட்டுவார் -
(அவர்கள்) ஆணவ மலங் கருகும்படி வாட்டி, அவர் சென்னிமேல் மலர்
அடிக்கமலம் சூட்டுவார் - அவர் தலையின்மீது திருவடித்தாமரை மலரைச்
சூட்டி, மறைகடந்த தம் தொல் உரு விளங்கக் காட்டுவார் -
வேதங்களாலறியப்படாத தமது உண்மை வடிவை விளக்கமாகக் காட்டுகின்ற
இறைவர், ஒரு சித்தராய் கனவில் தோன்றினார் - ஒரு சித்தராகி
அப்பாண்டியனது கனவின்கண் தோன்றினார் எ - று.
வினைகள்
உயிர்களால் ஈட்டப்படுதலின் ஈட்டுவார் என்றார்;
ஈட்டப்பட்ட மிக்கவினை யென்னலுமாம். வினை யொத்தல் - நல்வினைப்
பயனையும் தீவினைப் பயனையும் ஒரு பெற்றியே நுகர்தல்; இன்ப
துன்பங்களில் விருப்பு வெறுப்பில்லாமை. இருள் மலம் - ஆணவமலம்.
கருக வாட்டுதல் - வறுத்த வித்துப்போல் வலிகெடச் செய்தல். இரு வினை
யொப்புவந்த காலத்தில் இறைவனே ஆசானா யெழுந்தருளிப் பாச நீக்கஞ்
செய்து திருவடி சூட்டித் தமதுண்மை யுருவைக் காட்டி யருளுவரென
முறையாற் கூறினர். வாட்டுவார், சூட்டுவார் என்பன எச்சங்கள். காட்டுவார் :
பெயர். (17)
வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி
அடிக ளேகினார் கவுரிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான். |
(இ
- ள்.) வடிகொள் வேலினாய் - கூர்மையைக் கொண்ட வேற்
படையை யுடையவனே, காடு அகழ்ந்து - காட்டினை அழித்து, மா கடம்ப
வனத்தினை - பெரிய கடம்ப வனத்தை, திருந்த - திருத்தமாக, கடிகொள் -
காவலைக் கொண்ட, அணிநகர் காண்க என - அழகிய நகராகுமாறு
செய்வாய் என்று, உணர்த்தி - அறிவித்து, அடிகள் ஏகினார் - சோமசுந்தரக்
கடவுள் மறைந்தார்; கவுரியர் ஆண்டகை - பாண்டியர் மரபிலுதித்த
ஆண்தன்மை மிக்க குலசேகரன், கங்குல் விடியும் வேலை கண் விழித்தனன்
- இரவு புலரும் வரையும் உறங்காதவனாயினான்; பரிதியும் விழித்தான் -
சூரியனும் உதயமானான் எ - று.
வடிகொள்
- வடித்தலைக்கொண்ட எனலுமாம். அகழ்தல் - வேருடன்
போக்குதல். காண்கென : அகரந் தொகுத்தல். வேலையு மென்னும் உம்மை
தொக்கது; விடியும் பொழுதில் துயிலொழிந்தான் என்னில் கனவும்
அப்பொழுதே நிகழ்ந்த தென்க. சூரியன் உதித்தா னென்பதனை
விழித்தானென்றார்; இதனைக் குணவணி யென்பர்.
(18)
கனவிற் றீர்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சர்
சினவிற் றீர்ந்தமா தவர்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
நனவிற் கேட்டதுங் கனவினிற் கண்டது நயப்ப
வினவித் தேர்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான். |
(இ
- ள்.) கனவில் தீர்ந்தவன் - கனவினின்று நீங்கிவிழித்திருந்த
பாண்டியன், நியதியின் கடன் முடித்து - செய்தற்குரிய நாட் கடமைகளை
முடித்து, அமைச்சர் - மந்திரிகட்கும், சினவில் தீர்ந்த மாதவர்க்கும் -
|