வெகுளுதலினின்று நீங்கிய
முனிவர்கட்கும், தன் கனாத்திறம் செப்பி - தனது
கனவின் வகையைச் கூறி, நனவில் கேட்டதும் - பகலில் வணிகன்பாற்
கேட்டதையும்; கனவில் கண்டதும் - இரவில் கனவிற் கண்டதையும், நயப்ப
வினவி தேர்ந்துகொண்டு - விருப்பமுற உசாவித் தெளிந்து, எழுந்தனன்
மேல்திசை செல்வான் - புறப்பட்டு மேற்குத் திசைக்கண் செல்வானாயினான்
எ - று.
நியதியின்
- இன் : சாரியை. அமைச்சர்க்கும் என விரிக்க. சினவு -
சினத்தல் : தொழிற் பெயர். பயனை வினவி யென்க. (19)
அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட்
டிமைச்ச லர்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோர்
தமைச்ச ரண்பணிந் தஞ்சலி தலையின்மேன் முகிழ்த்தான். |
(இ
- ள்.) அமைச்சரோடும் - மந்திரிகளோடும், அ நீபம் மா வனம்
புகுந்து - பெரிய அக் கடம்பவனத்தினுள் நுழைந்து, அம் பொன் சமைச்சு -
அழகிய பொன்னாலியற்றப்பட்டன போலும், அவிழ்ந்த - (மலர்கள்) மலர்ந்த,
பொற்றாமரைத் தடம் படிந்து - பொற்றாமரை வாவியில் மூழ்கி, ஒளிவிட்டு -
ஒளிவீசி, இமைச்சு அலர்ந்த - விளங்கிப் பரந்த, பொன் விமானமீது -
பொன்னாலாகிய விமானத்தின் கண், இனிது வீற்றிருந்தோர் சரண்தமை -
இனிதாக வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளை, பணிந்து -
வணங்கி, அஞ்சலி தலையின்மேல் முகிழ்த்தான் - அஞ்சலியாகக் கைகளைத்
தலையின்மீது கூப்பினான் எ - று.
சமைச்சு
- சமைக்கப்பட்டாற் போலும். சமைச்சு இமைச்சு
என்பவற்றிட்ல தகரத்திற்குச் சகரம் போலி. சரண்தமை என மாற்றுக.
சரண்புகுந்து பணிந்து என்னலுமாம். (20)
அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீர்த் தேக*
என்பு நெக்கிட வெகிவீழ்ந் திணையடிக் கமலம்
பொன் புனைந்ததார் மௌலியிற் புனைந்தெழுந் திறைவன்
முன்பு நின்றுசொற் பதங்களாற் றோத்திர மொழிவான். |
(இ
- ள்.) அன்பு பின் தள்ள - அன்பானது பின் நின்று தள்ளவும்,
அருள் கண் - (இறைவன்) அருட்பார்வையானது, முன்பு வந்து ஈர்த்து ஏக
- முன்னே வந்து இழுத்துச் செல்லவும், என்பு நெக்கிட - எலும்புகடள
கரைந்துருகுமாறு, ஏகி - சென்று, வீழ்ந்து - கீழே விழுந்து இணை
அடிக்கமலம் - இரண்டு திருவடித்தாமரைகளையும், பொன்புனைந்த தார்
மௌலியில் புனைந்து - பொன்னாற் செய்த மாலையை யணிந்தமுடியின்மீது
சூடி, எபந்து இறைவன் முன்பு நின்று - எழுந்து சோமசுந்தரக் கடவுளின்
திருமுன் நின்று, சொல் பதங்களால் தோத்திரம் மொழிவான் - சிறந்த
மொழிகளால் துதிசெய்வானாயினான் எ - று.
அவனைவணங்குதற்கு
அவனருளும், அதனாலுண்டாம் அன்பும்
காரணமாதல் தோன்ற அன்பு தள்ள அருட்கண் ஈர்த்தேக என்றார்.
(பா
- ம்.) * அருட்கணீர் தேங்க.
|