"நரகொடு சுவர்க்க
நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி" |
என்னும் திருவாசகமும்
காண்க. பட்டு என்பது படவெனத் திரிந்தது.
நோயுண்டாக என்னலுமாம். (23)
சூள தாமறைச் சென்னியுந் தொடத்தொட நீண்ட
நிள னீ*யுனக் கன்பில மாயினு நீயே
மூற வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
டாள வேகொலிக் கானகத் தமர்ந்தனை யென்னா. |
(இ
- ள்.) சூளது ஆம் மறைச் சென்னியும் - (தொடுவேனென்னும்)
சபதத்தையுடையதாகிய வேதத்தின் அந்தமும், தொடத்தொட நீண்ட நீளன்
நீ - எட்டுந்தோறும் எட்டுந்தோறும் நீண்ட நீட்சியையுடையவன் நீ; உனக்கு
அன்பிலம் ஆயினும் - உனக்கு யாம் அன்பில்லேம் ஆனாலும், நீயே அன்பு
மூள தந்து - நீயே அன்பு பெருகும்படி அருளி, எம் குடிமுழுவதும்
பணிகொண்டு ஆளவே கொல் - எமது குடி முழுதையும் ஏவல் கொண்டு
ஆளுதற்கோ, இக் கானகத்து அமர்ந்தனை என்னா - இக் காட்டின்கண்
எழுந்தருளினை என்று கூறி எ - று.
சூள்
- வஞ்சினம்; வேதமானது இறைவனைக் காண்டற்கு ஆராய்ச்சி
செய்யுமுறையை அவனை எவ்வாற்றாலேனும் தொடு வேனென வஞ்சினங்
கூறித் தேடுதல் போலுமென்றார். தொடத் தொட - தொடும்படி நெருங்குந்
தோறும். நீளன் - சேய்மையன், ஆளுதற்கே அமர்ந்தனை யாவாயென்க.
அவனது அருமையும், தமது எளிமையுந் தோன்ற நீளன் என்றும், அன்பிலம்
என்றுங் கூறி, அரியனாகிய அவன் தமது திறத்தும் எளியனாய் வரும் பெருங்
கருணையை அமர்ந்தனை யென்பதனாற் குறிப்பித்த வாறாயிற்று. (24)
சுரந்த வன்பிரு கண்வழிச் சொரிவபோற் சொரிந்து
பரந்த வாறொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறமபோந்
தரந்தை தீர்ந்தவ னொரு+சிறை யமைச்சரோ டிருந்தான். |
(இ
- ள்.) சுரந்த அன்பு - (அகத்தில்) ஊற்றெடுத்த அன்பானது,
இரு கண்வழி சொரிவபோல் - இரண்டு கண்களின் வழியாகவும் பொழிவது
போல், சொரிந்து பரந்த ஆறொடு - பொழிந்தமையாற் பரந்த ஆனந்தக்
கண்ணீராகிய நதியோடு, சிவானந்தப் பரவையுள் படிந்து - சிவானந்தமாகிய
கடலுள் மூழ்கி, வரம் தவாத மெய் அன்பினால் - மேன்மை குன்றாத
உண்மை யன்பினால், வலங்கொடு - வலம் வந்து, அரந்தை தீர்ந்தவன் -
துன்ப நீங்கியவனாகிய பாண்டியன், புறம் போந்து அமைச்சரோடு ஒரு சிறை
இருந்தான் - புறத்தே வந்து மந்திரிகளோடு ஒரு பக்கத்தில் இருந்தான்
எ - று.
சொரிவ
: துவ்வீறு தொக்கது; தொழிற்பெயர். தீர்ந்தவண் என்று
பாடமாயின் தீர்ந்து அவண் எனப் பிரிக்க. (25)
(பா
- ம்.) * நீள நீ. +அரந்தை தீர்ந்தவ ணொரு.
|